ஸ்ரீதிவ்யாவின் பிறந்த நாள் குழப்பம்

  • IndiaGlitz, [Wednesday,May 25 2016]

பிரபல நடிகர் கார்த்தி, பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஆகியோர் இன்று தங்கள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் பிறந்த நாள் இன்றுதான் என்று அவருடைய ரசிகர்கள் ஸ்ரீதிவ்யாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஸ்ரீதிவ்யாவின் விக்கிபீடியா பக்கத்தில் மே 25ஆம் தேதிதான் ஸ்ரீதிவ்யாவின் பிறந்தநாள் என்று பதிவு செய்யப்பட்டிருப்பதால் ரசிகர்கள் இன்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் ஸ்ரீதிவ்யா இதற்கு தனது சமூக வலைத்தளத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

இன்று எனது பிறந்தநாள் என கருதி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இருப்பினும் எனது உண்மையான பிறந்த நாள் நவம்பர் 30ஆம் தேதிதான். அன்றைய தினம் அனைவரும் என்னை வாழ்த்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீதிவ்யாவின் இந்த விளக்கத்தினால் அவருடைய பிறந்தநாள் குழப்பம் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

More News

இது நம்ம ஆளு' படத்தில் சிம்புவும் நயனும் நடிக்கவே இல்லை : பாண்டிராஜ்

சிம்பு, நயன்தாரா நடித்துள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படம் வரும் 27ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் பாண்டியராஜ் கூறியபோது...

கமல்ஹாசன் அவுட், சூர்யா இன்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது அடுத்த படமான 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பிற்காக மகள் ஸ்ருதிஹாசன் உள்பட படக்குழுவினர்களுடன்...

'கபாலி' குறித்து தாணுவிடம் விஜய் அளித்த கமெண்ட்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' என ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு...

சென்னை மல்டிபிளக்ஸில் 'தெறி' செய்த புதிய சாதனை

அட்லி இயகக்த்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வசூலில் உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகள்...

காமெடியில் கம்பீரம் காட்டிய கவுண்டமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினிகாந்த்-கமல்ஹாசன், அஜித்-விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த காமெடி நடிகர் கவுண்டமணி...