'ரெமோ'வில் இணைந்த சிவகார்த்திகேயனின் ராசியான ஜோடி

  • IndiaGlitz, [Thursday,June 30 2016]

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரெமோ' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் நர்ஸ் கெட்டப் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் நாளை சிங்கப்பூரில் 'செஞ்சிட்டாளே' சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ராசியான ஜோடியா ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இந்த படத்தில் இயக்குனராகவே சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் நிலையில் ஸ்ரீதிவ்யாவும் இந்த படத்தில் நடிகையாக தோன்றுவதாகவும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீதிவ்யா ஏற்கனவே 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'காக்கிச்சட்டை' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் தற்போது அவர் 'காஷ்மோரா' படத்தில் நடித்து முடித்துவிட்டு 'சங்கிலி புங்கிலி கதவை தொற' படத்தில் நடித்து வருகிறார்.

More News

'கபாலி'யில் இணைந்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்

சூப்பர் ஸ்டார் நடித்த 'கபாலி' ஜூரம் தமிழகத்தை மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் வெளிநாட்டிலும் பரவி வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற கடும்போட்டி ஏற்பட்டுள்ளது...

பொது சேவை செய்தால் 'கபாலி' இலவச டிக்கெட். புதுவை ஆளுனரின் புதுமை ஐடியா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் புரமோஷன் ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டில் இருந்து ஏர் ஆசியா விமானம்...

'மெட்ரோ' வில்லனாகும் 'மெட்ரோ' நாயகன்

கடந்த வெள்ளியன்று வெளியான 'மெட்ரோ' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

சமந்தா திருமணத்தை உறுதி செய்த நாகார்ஜூனா?

கோலிவுட், டோலிவுட்டின் பிரபல நடிகை சமந்தாவுக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்று முன்னர் பார்த்தோம்...

அஜித், விஜய் இயக்குனரின் அடுத்த படத்தில் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மனிதன்' திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தை கவுரவ் நாராயணன் இயக்கவுள்ளதாகவும்...