close
Choose your channels

'தி லெஜண்ட்' படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் ரிலீஸ் செய்யும் பிரபலம்!

Wednesday, July 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ திரைப்படம் ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’தி லெஜண்ட்’ திரைப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் பெற்றிருப்பதாகவும் இந்தியா தவிர உலக நாடுகளின் ரிலீஸ் உரிமையை ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் பெற்றிருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அதேபோல் கேரள மாநிலத்தில் இந்த படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்த நிலையில் தற்போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இந்த படத்தை ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் திருப்பதி பிரசாத் அவர்கள் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டர்ன், யோகிபாபு, ரோபோ சங்க உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.