சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் இலங்கையின் முன்னணி வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய முன்னணி வீரராக இருந்து வரும் உபுல் தரங்கா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 36 வயதான இவர் கடந்த 2005 முதல் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது இவர் ஒரே நேரத்தில் 2 சதம் அடித்து ரசிகர்களை அசர வைத்தார். அதோடு இலங்கை அணிக்காக இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 3 சதத்தை விளாசி 1,754 ரன்களையும் குவித்து இருக்கிறார். 235 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 6,951 ரன்களை எடுத்து இருக்கிறார். மேலும் 26 டி20 போட்டிகளில் விளையாடி 407 ரன்களை எடுத்து இருக்கிறார்.

சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணி சார்பாக கடந்த 15 ஆண்டுகளாக களம் இறங்கி வரும் உபுல் தரங்கா தற்போது சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இதையடுத்து உள்ளூர் போட்டிகளில் இவர் தொடர்ந்து விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

More News

தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரரின் அசத்தல் சாதனை!

தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரரான ஜி.சத்யன் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.

சசிகலாவுடன் பிரபல நடிகர் சந்திப்பு: தேர்தல் கூட்டணியா?

சசிகலாவை பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான சரத்குமார் திடீரென சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சங்கீதா மகளா இவர்? ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'பிதாமகன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சங்கீதா. அதன் பின்னர் 'உயிர்' என்ற திரைப்படத்தில்

ஊழல் ஒழிப்புப் பணிக்காக சர்வதேச விருது… அசத்தும் இந்தியப் பெண்மணி!

ஊழல் ஒழிப்பு என்ற கொள்கையை வைத்துக் கொண்டுதான் இந்தியாவில் பெரும்பாலான கட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அறிமுகம் ஆகின்றன.

ஆஜித்தின் புதிய முயற்சிக்கு நேரில் வந்து வாழ்த்திய பாலா-ஷிவானி!

ஆஜித்தின் புதிய முயற்சிக்கு நேரில் வந்து பாலாஜி, ஷிவானி உள்பட பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது