ஸ்ரீரெட்டியின் தமிழ்லீக்ஸ் பட்டியலில் இளம் தமிழ் ஹீரோ

  • IndiaGlitz, [Monday,July 16 2018]

ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் கோலிவுட் பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை கூறி வருகிறார். அவரது புகார் பட்டியலில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி ஆகியோர்களை அடுத்து தற்போது இளம் நடிகர் சந்தீப் கிஷான் இணைந்துள்ளார்.

இளம் நடிகர் சந்தீப் கிஷானை ஸ்ரீரெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடுமையான வார்த்தைகளில் திட்டி தீர்த்து அவரும் தன்னை ஏமாற்றியவர்களில் ஒருவர் என்று கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டி தினந்தோறும் தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டி வருவதால் நடிகர் சங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணமாக இது பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர் சங்க செயலாளர் விஷால் இதுகுறித்து ஸ்ரீரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் ஸ்ரீரெட்டியின் பட்டியல் தொடர்ந்து கொண்டிருப்பதால் விரைவில் சட்டரீதியிலான நடவ்டிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாரில் சிக்கிய பிரபல இயக்குனர்

ஸ்ரீரெட்டி தன்னை வாய்ப்புக்காக பயன்படுத்தியதாக பல திரையுலக பிரமுகர்கள் மீது கடந்த சில மாதங்களாக குற்றஞ்சாட்டி வருகிறார். கடந்த சில நாட்களாக அவரது பார்வை தமிழ்த்திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது.

த்ரிஷாவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்து சுமார் 15 வருடங்களுக்கும் மேல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் நாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா

'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் கலக்கலான வசூல்

கார்த்தி, சாயிஷா, நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாராட்டுக்களை பெற்றது. குடும்ப செண்டிமெண்ட்,

4 நாள் வசூலில் சூப்பர் ஹிட் பட்டியலில் இணைந்த 'தமிழ்ப்படம் 2'

சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த வியாழன் அன்று வெளியான 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு இணையாக ஒப்பனிங் வசூலை பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

8 வழிச்சாலை திட்டம் குறித்து ரஜினி அதிரடி கருத்து

சென்னை-சேலம் 8 வழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.