முதலமைச்சர் ஒரு ரியல் ஹீரோ: ஸ்ரீரெட்டி பாராட்டு

  • IndiaGlitz, [Saturday,April 20 2019]

திரையில் ஹீரோக்களாக தோன்றுபவர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை, ஆனால் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஒரு ரியல் ஹீரோ என நிரூபித்துவிட்டார் என நடிகை ஸ்ரீரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளிவந்தால் இன்னும் எத்தனை பிரபலங்களின் தலை உருளும் என்ற பயம் பலரிடத்தில் உள்ளது

இந்த நிலையில் தெலுங்கு நடிகைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருவதை அடுத்து இதுகுறித்து விசாரணை செய்ய ராமமோகன் ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட ஒரு குழு ஒன்றை தெலுங்கானா அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் நடிகை சுப்ரியா, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜான்சி, இயக்குநர் நந்தினி ரெட்டி, பேராசிரியை வசந்தி, மருத்துவர் ராம தேவி, சமூக ஆர்வலர் விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அறிவிப்பு குறித்து நடிகை ஸ்ரீரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'தெலுங்கானா அரசுக்கு நன்றி, என்னுடைய கனவுகள் இன்று நிஜமாகிவிட்டது. திரையில் ஹீரோக்களாக தோன்றுபவர்கள் நிஜத்தில் அப்படி இல்லை. ஆனால், முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஒரு ரியல் ஹீரோ என நிரூபித்துவிட்டார். வேசி என அழைக்கப்பட்ட நான் இதன் மூலம் கதாநாயகியாக மாறிவிட்டேன். ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என பதிவு செய்துள்ளார்.

More News

சினிமாவில் ஹீரோவாகும் லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் தலைவர் லெஜண்ட் சரவணன் !

பல கிளைகளை கொண்ட சென்னையின் மிக பிரபலமான  சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் நடுத்தர மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை

மும்பை பார்ட்டியில் கலந்து கொண்ட கீர்த்திசுரேஷ் - ஜான்வி கபூர்

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்திசுரேஷ், தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும்

ஒருபாலின திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீராங்கனைகள்: ரசிகர்கள் வாழ்த்து!

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனைகள் இருவர் காதலித்து ஒருபாலின திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இயக்குனர்களின் 'கனா'வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்!

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' உள்பட ஒருசில படங்களை இயக்கிய பொன்ராம், 'வேல்முருகன் போர்வெல்' படத்தை இயக்கிய எம்பி கோபி ஆகிய இருவரும் உசிலம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்

ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம்! ஏன் தெரியுமா?

பிரபல இந்திய கிரிக்கெட் வீர்ர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.