'எல்.கே.'ஜி' படத்துடன் கனெக்சன் ஆனது 'கோமாளி'

  • IndiaGlitz, [Tuesday,July 23 2019]

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் வியாபாரமும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது

'கோமாளி' திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஸ்ரீசக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி நடித்த 'எல்.கே.ஜி' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றது என்பதும் இந்த இரண்டு படங்களையும் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரித்த படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யூக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிகுமார், யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரிலீசுக்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

'இசைஞானி' இசைக்கு பாடல் எழுதிய 'கனா' பாடலாசிரியர்

சிவகார்த்திகேயன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான 'கனா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

'லிப்கிஸ்' மிஸ் ஆனதால் ஏமாற்றம் அடைந்த பிரியா வாரியர்

மலையாள நடிகை பிரியா வாரியர் நடித்த 'ஒரு ஆதார் லவ்' என்ற படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானபோது அதில் இடம்பெற்றிருந்த ஒரே ஒரு கண்ணசைவு காட்சி நாடு முழுவதும் வைரலானது.

விமல் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்!

விமல் நடித்த 'களவாணி 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் அவர் தற்போது 'சண்டக்காரி' என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'மை பாஸ்

விஜய் நடிக்கவிருந்த படத்தில் அறிமுக ஹீரோவா?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படமும், விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.

அஜித், விக்ரம், சூர்யா பட நடிகைக்கு 6 மாதம் ஜெயில்: நீதிமன்றம் உத்தரவு

அஜித் நடித்த அசல், சூர்யா நடித்த அயன், விக்ரம் நடித்த தூள், ஆகிய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தவர் நடிகை கொய்னா மித்ரா. இவர் மாடல் அழகி பூனம் செதி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளதாகவும், க