தனுஷ் இயக்கும் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு
தனுஷ் இயக்கிய 'பவர் பாண்டி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி திருப்திகரமான வசூலையும் கொடுத்தது. இதனையடுத்து தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை 'மெர்சல்' தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே நாம் நமது வாசகர்களுக்கு தெரிவித்திருந்தோம்
இந்த நிலையில் இந்த செய்தி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டுவீட்டில் நாகார்ஜூனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதிராவ் ஹைத்தி ஆகியோர்களுக்கும் டேக் செய்யப்பட்டுள்ளதால் இவர்கள் அனைவரும் இந்த படத்தில் பணிபுரிய வாய்ப்பு உள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்றும் இந்த படம் இரண்டு மொழிகளில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது