ஸ்ரீகாந்த் ஜோடியாக 'தடம்' பட நடிகை: டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,August 28 2020]

’ரோஜா கூட்டம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’ஏப்ரல் மாதத்தில்’ ’போஸ்’ ‘கனா கண்டேன்’ ’மெர்குரி பூக்கள்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். தளபதி விஜய்யுடன் ’நண்பன்’ என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்கனவே ஓரிரு படங்களில் நடித்து வரும் நிலையில் புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கபடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் இந்த படத்திற்கு ’எக்கோ’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன் கணேஷ் என்பவர் இயக்கும் இந்த படத்தில் நாயகியாக வித்யா பிரதீப் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அருண் விஜய் நடித்த ’தடம்’ என்ற படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

இது ஒரு கிரைம் சப்ஜெக்ட் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கல்வித்துறையில் முன்னோடியாக விளங்கும் தமிழகம்!!! அதிரடி திட்டங்கள்!!!

உயர்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை விகிதத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தை பிடித்து இருக்கிறது

முதல்முறையாக 2வது குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்த பிரபல நடிகை: நெட்டிசன்கள் வாழ்த்து

கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த 'என்னவளே' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'ஆனந்தம்' 'ஏப்ரல் மாதத்தில்' 'விரும்புகிறேன்' 'வசீகரா' 'ஜனா' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சினேகா

மன்னிப்பு கேட்காவிட்டால் கைது செய்வோம்: தமிழ் நடிகருக்கு காவல்துறை எச்சரிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தேசியக்கொடி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார்

கல்லூரி இறுதியாண்டு தேர்வு… சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு!!!

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு விலக்கு கோரிய வழக்கு… உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!!!

கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியிருக்கிறது.