பிரபுதேவாவை சந்தித்த இலங்கை பிரதமர்.. 'முசாசி' படக்குழுவினர்களுக்கு வாழ்த்து..!

  • IndiaGlitz, [Friday,September 29 2023]

இலங்கையின் படப்பிடிப்பிற்காக முகாமிட்டிருக்கும் பிரபுதேவாவின் 'முசாசி' படக் குழுவினரை அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்து, சந்தித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும் , நடன இயக்குநருமான பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'முசாசி. அறிமுக இயக்குனர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார்.‌ ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜாய் பிலிம் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டு இருக்கிறார்கள். படக்குழுவினரை கௌரவப்படுத்துவதற்காக அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினை ஏற்ற படக் குழுவினர் அவர் நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர். இது தொடர்பான புகைப்படத்தை படக் குழுவினர் பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

'முசாசி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

More News

ஷாருக்கானுடன் மோதல் உறுதி.. பிரபாஸின் 'சலார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஷாருக்கான் நடித்த 'டங்க்கி' என்ற திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்மஸ் விருந்தாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதே தேதியில் பிரபாஸ் நடித்துள்ள 'சலார்'  திரைப்படம்

கணவருடன் 10 வருட வாழ்க்கை.. ப்ரியா அட்லியின் எமோஷனல் பதிவு..!

பிரபல இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி, தனது சமூக வலைத்தளத்தில் தான் முதல் முறை அட்லியை சந்தித்தது முதல் இன்று வரையிலான 10 வருட  வாழ்க்கையை எமோஷனலாக பதிவு செய்துள்ளார்.

விஜய் ஆண்டனியின் அடுத்த பட டைட்டில்.. மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இதன் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'லியோ'வில் இணைந்த கமல்ஹாசன்.. கமாண்டர் கர்ணன் எல்.சி.யூ காட்சிகளா?

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று இரண்டாவது சிங்கள் பாடல் வெளியானவுடன் இந்த படத்திற்கு உச்சபட்ச

சென்சார் சான்றிதழ் வாங்க லட்சக்கணக்கில் லஞ்சம்.. விஷால் கூறிய அதிர்ச்சி தகவல்..!

நடிகர் விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் வசூலிலும் சாதனை செய்து வருகிறது என்பதும் தெரிந்ததே.