கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 வெடிகுண்டு கண்டுபிடிப்பு: மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமா?

இலங்கையில் நேற்று தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படையினர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 300 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியான 300 பேர்களில் 6 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 வெடிகுண்டு டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்த இலங்கை அதிபர் சிறிசேனா மீண்டும் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் முப்படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி அதிபர் மைத்ரிபாலா சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் அமலுக்கு வருகிறதாகவும் அறிவித்துள்ளார். இதனால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

மனைவியை பழிவாங்க நாய் கூட்டில் குழந்தையை அடைத்து சித்திரவதை செய்த தந்தை!

சீனாவை சேர்ந்த ஒருவர், விவாகரத்து பெற்று சென்ற மனைவியை பழிவாங்க, தன்னுடைய 20 மாத குழந்தையை பல்வேறு வகையில் 

விஜய்சேதுபதியை இயக்க போவது உண்மையா? இயக்குனர் ஆனந்த்சங்கர் விளக்கம்

விக்ரம்பிரபு நடித்த 'அரிமா நம்பி', விக்ரம் நடித்த 'இருமுகன்' மற்றும் விஜய் தேவரகொண்டா நடித்த 'நோட்டா' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த்சங்கர்,

ஒரு ரன்னில் தோல்வி: குட்டிப்பாப்பாவின் வேண்டுகோளை ஏற்றாரா தோனி?

நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வாய்ப்பு மிகவும் குறைவு என்ற நிலையில் விஸ்வரூபம் எடுத்தார் தல தோனி.

மனைவி, குழந்தைகளை கொலை செய்து வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய சாப்ட்வேர் எஞ்சினியர்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசிதாபாத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் அதன் வீடியோவை

கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம்: பூசாரி கைது!

திருச்சி அருகே உள்ள துறையூர் முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோவில் விழாவின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.