அவர் என்னிடம் கடைசியாக பகிர்ந்து கொண்டது இதுதான். அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஸ்ரீநிவாஸ் மனைவியின் உருக்கமான பதிவு

  • IndiaGlitz, [Monday,March 06 2017]

சமீபத்தில் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐதராபத்தை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவு அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை மட்டுமின்றி இந்தியாவில் வாழும் இந்தியர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது. இனவெறி காரணமாக சுட்டு கொல்லப்பட்ட அந்த இளம் பொறியாளரின் வாழ்க்கை ஒரே வினாடியில் முடிந்துவிட்டது. அவருடைய மனைவி சுனாயனா ஒரே நாளில் விதவையாகிவிட்டார். கணவரை இழந்து திக்கு தெரியாமல் நிற்கும் அவர் முதன்முதலாக சமுக வலலத்தளத்தில் செய்த உருக்கமான பதிவு இதுதான்:
சமுக வலலத்தளத்தில் முதன்முதலில் ஒரு பதிவை மிகவும் கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். 2017 பிப்ரவரி 22-ம் தேதி அன்று என் நண்பன், என் நம்பிக்கை, என் உயிர்தோழன், என் கணவர் ஆகிய மொத்தத்தையும் இழந்தேன். அவர் எனக்கு மிகச்சிறந்த வழிகாட்டி, எனக்கு உறுதுணையானவர். எனக்கு மட்டுமல்ல, அவரைச் சுற்றியுள்ள அனைவருக்குமே அவர் ஒரு வழிகாட்டியாக இருந்தவர். அவர் முகத்தில் புன்னகை தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. அனைவரையும் மதிப்பவர், குறிப்பாக பெரியவர்களிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தவர்ல்.
நாங்கள் 2006-ம் ஆண்டு, எங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் முதன்முறையாக சந்தித்தோம். பிறகு ஆர்குட்' வலைதளத்தின் நட்பாகி சாட்டிங் மூலம் பேசத் தொடங்கினோம். பார்த்தவுடனே, இருவருக்கும் பிடித்தது. அவர் மிகவும் வசீகரமாக இருந்தார். இரண்டு சகோதரிகளுடன் பிறந்த நான், சுதந்திரமாக வளர்க்கப்பட்டேன். நான் அமெரிக்காவுக்குச் சென்று படிக்கவேண்டும் என்று கூறியவுடன் என்னுடைய கனவை நனவாக்கியது, ஸ்ரீநிவாஸ்தான். ஒரு சுதந்திரமான, உறுதியான பெண்ணாக இன்று நான் இருப்பதற்கு அவர்தான் முழுகாரணம். திருமணத்துக்குப் பிறகு நானும் அவரும் அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் என்ற பகுதியில் குடியேறினோம். கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்துதான், நான் பணிக்குச் செல்லத் தொடங்கினேன். நான்கு ஆண்டுகள் வேலைக்குச் செல்லாமல், மீண்டும் பணிக்குச் செல்ல வேண்டும் என எண்ணியபோது, எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து, நான் வேலைக்குச் செல்ல முழுகாரணமாக இருந்தது அவர்தான்.
ஸ்ரீனிவாஸ் விமான போக்குவரத்துத் துறையில் புதுமை செய்யவேண்டும் என எப்போதும் ஆர்வமாக இருந்தார். அவருக்கு 'ராக்வெல் கொல்லின்ஸ்' (Rockwell Collins) என்ற நிறுவனத்தில்தான் முதலில் வேலை கிடைத்தது. பல நாட்கள், அவர் இரவு சாப்பாட்டுக்கு மட்டுமே வீட்டுக்கு வருவார்; பிறகு, அதிகாலையில் கிளம்பிவிடுவார். அதன்பிறகு, மறுநாள் அதிகாலை 2 அல்லது 3 மணிக்குத்தான் வீடு திரும்புவார். நாங்கள் முன்பு இருந்த, லொவா நகரத்திலுள்ள சிடர் ரபிட்ஸ்' என்ற அழகிய சிறிய பகுதி அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், நாங்கள் பெரிய நகரத்துக்கு இடமாற நினைத்தோம். ஏனென்றால், எனக்கு வேலை கிடைத்து, என் கனவை தொடர வேண்டும் என நாங்கள் விரும்பினோம். இதற்குச் சிறந்த இடமாக 'கன்சாஸ்' இருக்கும் என்று நினைத்தோம். நிறைய கனவுகளுடன் இங்கு வந்தோம். எங்களுடைய கனவு இல்லத்தை கட்டினோம்; அதில் ஒரு கதவுக்கு, அவரே சாயம் பூசினார். அவருக்கு வீட்டில் வேலை செய்வது மிகவும் பிடிக்கும். இந்த வீடு அவர் கட்டியது; எங்கள் குழந்தைகளுடன் ஒரு குடும்பமாக நாங்கள் வாழ, அவர் எடுத்துவைத்த முதல் அடி. ஆனால், எங்கள் கனவில் ஒரு பேரிடி வந்து விழும் என எதிர்பார்க்கவில்லை.
அன்றிரவு காவல்துறையினர் எங்கள் வீட்டுக்கு வந்து, என் கணவரை யாரோ ஒருவர் சுட்டுக்கொன்றார் என தெரிவித்தபோது, என்னால் நம்பவே முடியவில்லை. 'கண்டிப்பாக தெரியுமா', 'உண்மையைத்தான் சொல்கிறீர்களா?', 'நீங்கள் யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று தெளிவாக தெரிந்துதான் பேசுகிறீர்களா?', 'நான் அடையாளம் காண்பதற்கு ஏதேனும் படங்களைக் காட்டுங்கள்', 'அவர் 6' 2” உயரத்தில் இருந்தாரா?', என காவல்துறையினரைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தேன். அவர்கள் எல்லாவற்றுக்கும் ஆமாம்' என்றே பதிலளித்துக்கொண்டு இருந்தார்கள். கன்சாஸில் வேறு யாரையும் தெரியாது என்பதால், டல்லாஸில் உள்ள அவரின் சகோதரரை அலைபேசியில் அழைத்தேன். காவல்துறையினர் கூறியதை அவர் சகோதரரிடம் நான் கூறியபோது, நான் ஜோக்' செய்வதாக அவர் நினைத்தார். என் நண்பர்கள் என்னுடன் இருந்தார்கள்; அவர்கள் என்னை விட்டு ஒரு நொடிகூட செல்லவில்லை. எப்போதும் அன்பாக இருக்கும் அவருக்கு கடைசியாக பிரியாவிடை சொல்ல, அவரின் நண்பர்கள் கலிஃபோர்னியா, நியூ ஜெர்ஸி, டென்வர், லொவா, மின்னேசோடா ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்தார்கள்.
இந்த மார்ச் 9-ம் தேதியுடன், அவருக்கு 33 வயதாகி இருக்கும். அன்று நாங்கள் நியூஜெர்ஸியில், அவரின் உறவினருக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு செல்லவிருந்தோம். அதற்காக, கடந்த வாரயிறுதியில் ஷாப்பிங் செய்யத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தற்போது எல்லாமே தலைகீழானது. அவரின் சவபெட்டியுடன் நான் இந்தியா திரும்பிக்கொண்டு இருந்தேன். ஒரே மாலையில், நான் மனைவி' என்ற அங்கீகாரத்திலிருந்து விதவை'யானதை என்னால் இன்னும் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை.
அவருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். எங்கள் குடும்பத்தை விரிவுப்படுத்த வேண்டும் என சில வாரங்களுக்கு முன் தான், மருத்துவரை சந்தித்தோம். 'நாம் இன்-விட்ரோ' முறைப்படி குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், பணத்தை சேமிக்க வேண்டும்'. இதுதான் அவர் என்னிடம் கடைசியாக பகிர்ந்துக் கொண்ட வார்த்தைகள்! உண்மையிலேயே, நமக்கு ஒரு குழந்தை இருந்திருக்க வேண்டும். உன்னைப் போல் அவன் இருந்திருக்க வேண்டும். அவனைப் பார்த்துக்கொண்டு, உன்னைப் போலவே வளர்த்திருப்பேன். ஸ்ரீனு, என் காதலே, நீ இல்லாத அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்பப்போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயம் உன் பெருமையை தாழ்த்தும்படி நடந்து கொள்ள மாட்டேன்.
நான் உன்னை காதலிக்கிறேன்... நீ எப்பொழுதும் எனக்கு சொந்தமானவன்! கடைசியாக ஒரு கேள்வி - அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள் அனைவரிடமும் இருக்கும் கேள்வி இது. நாங்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்களா? நாங்கள் கனவு கண்டுக்கொண்டிருக்கும் அதே நாடா இது? எங்கள் குடும்பத்தை, குழந்தைகளை வளர்ப்பதற்கு இது இன்னும் பாதுகாப்பான இடமாகத்தான் இருக்கிறதா?”,
இவ்வாறு ஸ்ரீனிவாஸ் மனைவி சுனாயனா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

More News

என் தந்தை பிச்சை எடுப்பதை கண்ணால் பார்த்தேன். விஷால் உருக்கமான பேச்சு

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அனைத்து தயாரிப்பாளர்களும் ஆவேசமாக முந்தைய நிர்வாகிகளின் இயலாமையை ஆவேசமாக விவரித்த நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால் உருக்கமாக பேசினார். விஷால் பேசியவதாவது...

'கபாலி', 'தெறி' படங்களை விற்று தருவோம். ஞானவேல்ராஜா வாக்குறுதி

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் புது அணியாக உருவாகியிருக்கும் விஷால் அணியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது...

என் அளவுக்கு தமிழ் பேச முடியுமா? கன்னடர் என கூறியவர்களுக்கு பிரகாஷ்ராஜ் ஆவேச பதில்

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 5 அணி போட்டியிடுவதால் அனைத்து தரப்பினர்களும் தற்போது வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....

நலிந்த தயாரிப்பாளர்கள் என்ற வார்த்தை அகற்றப்படும். விஷால் அணியினர்களின் வாக்குறுதிகள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோதண்டராமையா, ராதாகிருஷ்ணன், டி.சிவா மற்றும் விஷால் ஆகிய ஐந்து பேர் போட்டியிடுகின்றனர்...

யாக்கை, முப்பரிமாணம் சென்னை ஓப்பனிங் வசூல் நிலவரம்

கடந்த வாரம் வெளியான திரைப்படங்களில் 'குற்றம் 23' படத்தின் வசூல் நம்பர் ஒன்னாக இருந்தது குறித்து சற்றுமுன்னர் பார்த்தோம். அந்த வகையில் தற்போது கடந்த வாரம் வெளியான கிருஷ்ணாவின் 'யாக்கை' மற்றும் சாந்தனுவின் 'முப்பரிமாணம்' படங்களின் சென்னை ஓப்பனிங் வசூல் குறித்து தற்போது பார்ப்போம்...