கமல் இல்லையென்றால் 'பாபநாசம் 2' படம் இல்லை: ஸ்ரீப்ரியா

  • IndiaGlitz, [Wednesday,September 29 2021]

கமல்ஹாசன் இல்லையென்றால் ’பாபநாசம் 2’ படம் இல்லை என நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பாபநாசம்’. இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் ’த்ரிஷ்யம் 2’ படத்தின் தமிழ் ரீமேக்கான ’பாபநாசம் 2’ படத்தில் கமல்ஹாசன் விரைவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஸ்ரீப்ரியா பெற்றுள்ள நிலையில் இந்த படத்திலும் கமல்ஹாசன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை முடித்துவிட்டு அவர் ’இந்தியன் 2’ படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி பிக்பாஸ் சீசன் 5 மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் ஆகியவற்றிலும் கமல்ஹாசன் பிஸியாக இருப்பதாக ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் கமல்ஹாசன் நடிக்க உள்ளதால் கமல்ஹாசன் தேதி கொடுத்தால் மட்டுமே ’பாபநாசம் 2’ படம் உருவாகும் என்றும், இந்த படத்தின் ஹீரோயின் பற்றி எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் கமல்ஹாசன் எப்போது தயாராகி வருகிறாரோ அப்போதுதான் இந்த படம் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

More News

படங்கள் தோல்வி, கையில் பணம் இல்லை, அம்மா வீட்டை விற்று செய்த உதவி: அர்ஜூன் நெகிழ்ச்சி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது தெரிந்ததே.

பாலிவுட் நட்சத்திர காதலர்கள்… பிறந்தநாளில் வைரலாகும் அழகிய புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் அசைக்க முடியாத பிரபலங்களாக ரன்பீர் கபூர்- ஆலியா பட் ஆகிய இருவரும் வலம்வருகின்றனர்.

'புஷ்பா' படத்தில் ராஷ்மிகா மந்தனா கேரக்டர்: கிறங்கடிக்கும் கிளாமர் போஸ்டர்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா' திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது என்பதும்

'தளபதி 66' படத்தின் நாயகி இந்த மூவரில் ஒருவரா?

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே இன்னொரு பக்கம் தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66ஆவது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் மூன்று பிரபலங்கள்!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கவிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது பார்த்து