ஸ்ரீரெட்டி வெளியிட்ட ஆபாச வீடியோ: சமூக வலைத்தள பயனாளிகள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Thursday,August 09 2018]

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, டோலிவுட் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருவது 'கிகி சேலஞ்ச்' என்பது அனைவரும் அறிந்ததே. நடிகைகள் உள்பட பிரபலங்கள் ஓடும் காரில் இருந்து திடீரென இறங்கி நடனமாடும் வீடியோதான் கிகி சேலஞ்ச். இந்த கிகி சேலஞ்ச் வீடியோவை வெளியிட வேண்டாம் என ஏற்கனவே போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் கிகி சேலஞ்ச் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலும் அரைகுறை உடையுடன் அருவருப்பான நடன அசைவுகளுடன் அவர் நடனமாடியுள்ளதால் இந்த வீடியோ ஆபாச வீடியோவுக்கு இணையாக இருப்பதாக பலர் கமெண்ட் அளித்து வருகின்றனர்.