'பொன்னியின் செல்வன்' படத்தின் இந்த தகவலை கேட்டு ஆச்சரியம் அடைந்த எஸ்.எஸ்.ராஜமெளலி!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவலை கேட்டு பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி ஆச்சரியம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

‘பொன்னியின் செல்வன்’ திரைப் படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஜெயம்ரவி ஆச்சரியமான தகவல் ஒன்றை கூறினார்.

சமீபத்தில் தான் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி அவர்களை சந்தித்தபோது அவரிடம் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இரண்டு பாகங்கள் படப்பிடிப்பு குறித்து பேசி கொண்டிருந்தேன் என்றும், அப்போது இரண்டு பாகங்களை நாங்கள் 150 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம் என்று நான் கூறியதை கேட்டு அவர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்தார் என்றும் தெரிவித்தார்.

நான் பிராங்க் செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அவர் திரும்பத் திரும்ப 150 நாட்களில் உண்மையிலேயே படம் முடிந்து விட்டதா என்று கேட்டபோது உண்மைதான் 150 நாட்களில் முடித்துவிட்டோம், அதற்கு முக்கிய காரணம் சரியான திட்டமிடல் மற்றும் செயல்முறை என்று நான் கூறியதை அடுத்து அவர் ஆர்வத்துடன் அந்த படப்பிடிப்பு எப்படி நடந்தது என்பது குறித்து கேட்டார் என்றும் ஜெயம்ரவி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களும் 600 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களும் 150 நாட்களில் படப்பிடிப்பு முடிந்துள்ளதற்கு மணிரத்தினம் அவர்களின் சரியான திட்டமிடல் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

More News

மார்பில் ஆட்டோகிராப் போட சொன்ன ரசிகர்.. அதிர்ச்சி அடைந்த ராஷ்மிகா என்ன செய்தார் தெரியுமா?

நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் மார்பில் ஆட்டோகிராஃப் போடச் சொன்ன ரசிகர் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது.

குஷ்பு எனக்கு கால்ஷீட் கொடுக்கல.. சுந்தர் சி சொன்ன பொய்யை போட்டுடைத்த டிடி!

'காபி வித் காதல்' படத்தில் நடிக்க குஷ்புவிடம் கால்சீட் கேட்டதாகவும் ஆனால் குஷ்பு தனக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை என்றும் சுந்தர்சி கூறிய போது அது பொய்யென குஷ்பூ மற்றும் டிடி மாறி மாறி கூறியது

என் உடை, என் இஷ்டம், நீங்கள் யார்  அதை கேட்க? 'வெந்து தணிந்தது காடு' பாடகி ஆவேசம்!

நான் என்னுடைய வசதிக்காக எனக்கு பிடித்த உடைகளை அணிந்து கொள்கிறேன் என்றும் எனக்கு இப்படிப்பட்ட உடைகள் தான் பொருந்தாது என்று சொல்வதற்கு நீங்கள் யார் என்றும் 'வெந்து தணிந்தது காடு'

வெளிநாட்டில் தோழியுடன் செம ஆட்டம்.. மீனாவின் மாற்றத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகை மீனா தனது தோழியுடன் வெளிநாட்டில் செம ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் மீனா தனது கணவர் இறப்பில் இருந்து மீண்டு விட்டதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

1920 பிளாஷ்பேக் காட்சி.. 'இந்தியன் 2' படத்தின் கமலின் வேற லெவல் கெட்டப்!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கமல் ஹாசன், காஜல் அகர்வால்