ஆந்திர முதல்வரின் முயற்சியால் ஆஸ்காருக்கு செல்கிறது 'பாகுபலி 2'

  • IndiaGlitz, [Friday,May 05 2017]

கடந்த வாரம் வெள்ளியன்று வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது. உலக அளவில் ரூ.1000 கோடி வசூல் செய்த அவதார், டைட்டானிக், ஹாரிபாட்டர், லார்ட் ஆப் தி ரிங்ஸ்' ஆகிய படங்களின் வரிசையில் இந்திய திரைப்படம் ஒன்று இணையவுள்ளது ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தியாவுக்கே பெருமை சேர்த்த 'பாகுபலி 2' படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்த உள்ளதாகவும், அதுமட்டுமின்றி பாகுபலி படக்குழுவினர் அனைவரையும் அழைத்து பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

அடுத்த ஆஸ்கார் விருதில் 'பாகுபலி 2' திரைப்படம் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டால் நிச்சயம் விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தேசிய விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளையும் இந்த படம் குவிக்க வாய்ப்பு இருப்பதாக திரையுலகினர் கருதுகின்றனர்.

More News

'பாகுபலி' படம் குறித்து ராஜமெளலி கடைசியாக கூறியது இதுதான்

இந்தியாவின் பிரமாண்ட திரைப்படமான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆகி தற்போது ரூ.1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது...

இப்படி ஒரு படம் எடுத்தால் 'பாகுபலியை விட 10 மடங்கு வசூலாகும்: மார்க்கண்டேய கட்ஜூ

சமீபத்தில் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் இந்தியாவின் அதிக வசூலை செய்த படம் என்ற பெருமையை நேற்றே பெற்றுவிட்டது. மேலும் ரூ.1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற சாதனையையும் இன்னும் ஓரிரு நாட்களில் செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ராகவா லாரன்சுக்கு ஜோடியாகும் அஜித்-விஜய் நாயகி

கோலிவுட்டின் இரண்டு மாஸ் ஸ்டார்களான அஜித் மற்றும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகையின் கனவாக இருக்கும். ஆனால் வெகுசிலருக்கு மட்டுமே இருவருடனும் ஒரே நேரத்தில் ஜோடியாக நடிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும். விஜய்யின் 'புலி' மற்றும் அஜித்தின் 'வேதாளம்' படங்களில் ஸ்ருதிஹாசன் நடித்தார்...

'விவேகம்' டீசரின் ரன்னிங் டைம் இதோ:

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் டீசர் வரும் 18ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகவுள்ளது என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.

'விவேகம்' பட டீசர் ரிலீஸ் தேதி. இயக்குனர் சிவா அதிகாரபூர்வ அறிவிப்பு

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.