'நம்பவே முடியவில்லை'.. 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை பாராட்டிய பிரபல இயக்குனர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தை குறித்து இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி பாராட்டு கூறியுள்ளார்.
மே 1ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், இதுவரை 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய படங்கள் வெளியாகிய பிறகும், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு இன்னும் முன்பதிவு சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யைப் பார்த்த பிரபல இயக்குனர் ராஜமௌலி, “இது ஒரு அற்புதமான திரைப்படம். நகைச்சுவையுடன் மனதை நெகிழ வைக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஆரம்பம் முதல் முடிவு வரை ஆரோக்கியத்தை தூண்டும் அனுபவமாக இருந்தது. இயக்குனர் அபிஷன் ஜீவிந் சிறப்பாக எழுதி, அழகாக இயக்கியுள்ளார். சமீப காலத்தில் நான் பார்த்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தை அனைவரும் தவறாமல் பாருங்கள்,”
என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, தனது மனம் நெகிழ்ந்த விதத்தில் அபிஷன் ஜீவிந் தனது எக்ஸ் பக்கத்தில் “என்னால் நம்பவே முடியவில்லை… என் கண்களில் நட்சத்திரம் மின்னுகிறது! ராஜமௌலி சார், உங்கள் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். நீங்கள் அழைத்து வாழ்த்து கூறுவீர்கள் என கனவில் கூட நினைக்கவில்லை. என் கனவை நனவாக்கியதற்கும், உற்சாகம் தந்ததற்கும் நன்றி!” என கூறியுள்ளார். இப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Saw a wonderful, wonderful film Tourist Family.
— rajamouli ss (@ssrajamouli) May 19, 2025
Heartwarming and packed with rib-tickling humor. And kept me intrigued from beginning till end. Great writing and direction by Abishan Jeevinth.
Thank you for the best cinematic experience in recent years.
Don’t miss it…
Still in disbelief… I watched his films with stars in my eyes, never imagining that one day, the man who built those worlds would speak my name. @ssrajamouli sir, you’ve made this boy’s dream larger than life.
— Abishan Jeevinth (@Abishanjeevinth) May 19, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments