close
Choose your channels

'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் சென்சார் தகவல்: ரன்னிங் டைம் இத்தனை மணி நேரமா?

Wednesday, December 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 87ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படம் சென்சாருக்கு சென்று சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படம் கிட்டத்தட்ட 187 நிமிடங்கள் ஓடும் என தெரிகிறது. அதாவது மூன்று மணி நேரத்திற்கு மேலாக இந்த படத்தின் ரன்னிங் டைம் உள்ளது ஆச்சரியம் அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தி உள்பட பல இந்திய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.