இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மாஸ் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,January 25 2021]

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் மாஸ் அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இதன்படி சற்றுமுன்னர் சமூக வலைத்தளத்தில் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி இவ்வருடம் அக்டோபர் 13ஆம் தேதி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தை பல மாதங்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் நடித்து வரும் இந்த படம் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்தில் இந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான அஜய் தேவ்கான், ஆலியா பட், ஸ்ரேயா உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் அது மட்டுமின்றி ஒருசில ஹாலிவுட் நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கீரவாணி இசையமைக்கும் இந்தப் படம் ‘பாகுபலி’ படத்தின் அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அயலான் ரிலீஸ்? படக்குழு வெளியிட்ட தெறிக்கவிடும் அப்டேட்!

“இன்று நேற்று நாளை“ படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான்.

10 நாட்களை கடந்தும் மாஸ்டர் படத்திற்கு ரசிகர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வரவேற்பு!

ளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக் குவித்து வருகிறது.

பிரபல நடிகை மகளின் வேற லெவல் டிரான்ஸ்பர்மேஷன்… வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. அந்த அளவிற்கு அழகும் திறமையும் வாய்ந்தவர்.

எய்ட்ஸ் நோயாளி எனத் தெரிந்தே காதலித்தேன்… டிரைவருடன் சென்ற சிறுமியால் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் ஆட்டோ டிரைவருடன் காதல் ஏற்பட, தன் பெற்றோரை விட்டுவிட்டு அவருடன் சென்றுள்ளார்.

'வேல்' குறித்து வேறுவிதமான விளக்கம் அளித்த வைரமுத்து!

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக வேல் முக்கிய இடம் பிடித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் சமீபத்தில் வேல் யாத்திரை நடத்தினார்