close
Choose your channels

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மாஸ் அறிவிப்பு!

Monday, January 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் மாஸ் அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இதன்படி சற்றுமுன்னர் சமூக வலைத்தளத்தில் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி இவ்வருடம் அக்டோபர் 13ஆம் தேதி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தை பல மாதங்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் நடித்து வரும் இந்த படம் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்தில் இந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான அஜய் தேவ்கான், ஆலியா பட், ஸ்ரேயா உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் அது மட்டுமின்றி ஒருசில ஹாலிவுட் நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கீரவாணி இசையமைக்கும் இந்தப் படம் ‘பாகுபலி’ படத்தின் அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.