'ஆர்.ஆர்.ஆர்' டிரைலர் தேதியை அறிவித்த எஸ்.எஸ்.ராஜமெளலி!

  • IndiaGlitz, [Monday,November 29 2021]

பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில்கூட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி பாடல் ரிலீஸ் ஒன்றுக்காக சென்னை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் டிரைலர் வரும் 3ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவ்கான், ஆலியாபட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சுமார் 400 கோடியில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகள்: சிம்புவின் நெகிழ்ச்சியான அறிக்கை!

சிம்பு நடித்த 'மாநாடு'  திரைப்படம்' சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருமே உற்சாகத்தின் எல்லையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த நபர் பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி… நடந்தது என்ன?

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் இறந்தவர் ஒருவர் வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

பிரசவத்திற்காக சைக்கிளில் சென்ற அமைச்சர்… கவனம் ஈர்த்த சம்பவம்!

சுற்றுச்சூழல் ஆர்வம் கொண்ட நியூசிலாந்து நாட்டு பெண் அமைச்சர் ஒருவர் பிரசவ வலியுடன் தன்னுடைய சைக்கிளில் மருத்துவமனைக்குச்

உங்க ரெண்டு பேரு மேல எனக்கு டவுட்: நிரூப், ப்ரியங்காவிடம் ஆவேசமாக மோதும் அண்ணாச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி தலைவர் டாஸ்க்கில் வெற்றி பெற்ற நிலையில் அவருடைய தலைவர் பதவியை நிரூப் தன்னிடம் இருக்கும் காயின் மூலம் பறித்துக் கொண்டார் என்பதும்

ஆக்சன் படப்பிடிப்பின்போது 'மாஸ்டர்' மாளவிகா மோகனன் காயம்: வைரல் புகைப்படங்கள்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.