ரிலீசாகி 50 நாட்கள் கழித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறிய 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து பிரம்மாண்டமான வசூல் சாதனையை செய்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 50 நாட்கள் ஆனதை அடுத்து தற்போது டிஜிட்டலில் வெளியாகும் மகிழ்ச்சியான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஆர் ஆர் ஆர் ’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் ஜீ5 தளத்தில் மே 20, 2022 அன்று பிரத்யேகமாக ஒளிபரப்பாகுமென ஜீ5 அறிவித்துள்ளது. படம் வெளியாகி 50 வது நாளை கடந்த நன்நாளில் படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்த இந்த மகிழ்ச்சியான செய்தியை ஜீ5 தளம் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என் டி ஆர் , ராம்சரண் மற்றும் ஆலியா பட் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரமாண்டமாக உருவான இந்த திரைப்படம், மார்ச் 25, 2022 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகி, இந்திய திரைத்துறையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியது குறிப்பிடத்தக்கது.

மே 20 நடிகர் ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள் என்பது, ஜீ5 தளத்தில் ‘ஆர் ஆர் ஆர் ’ திரைப்படத்தை கொண்டாட, ரசிகர்களுக்கு மேலும் ஒரு முக்கிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது. 4K தரத்திலும், டால்பி அட்மாஸ் தரத்திலும் வீட்டிலிருந்தபடியே வீட்டுத் திரைகளிலும், மொபைல் போனிலும் இத்திரைப்படத்தை ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

இந்த திரைப்பட வெளியீட்டு அறிவிப்பைக் குறிக்கும் வகையில் ஜீ5 தளத்தால் வெளியிடப்பட்ட புதிய மற்றும் பிரத்யேக டிரெய்லரால், தென்னிந்தியத் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் தென்னிந்திய மொழி பேசாத பார்வையாளர்களும் ஜீ5 தளத்தின் இந்த உலக டிஜிட்டல் பிரிமியரைப் பற்றி மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அவர்கள் படத்தின் ஒரிஜினல் மொழியில் உருவான வசனங்களுடன் படத்தை சப்டைட்டிலுடன் பார்க்கலாம்! “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் ஜீ5 தளத்தில் TVOD இல் கிடைக்கிறது.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் , இந்திய திரைத்துறையின் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து, பாக்ஸ் ஆபிஸில் ஒரு புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளது. வர்த்தக அறிக்கைகளின்படி, உலகம் முழுவதும் இப்படம் ரூ. 1000 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

More News

நான் அப்படி சொல்லவே இல்லை: கீர்த்தி சுரேஷ்

கிளாமர் ரோல்களில் நடிக்க மாட்டேன் என கீர்த்தி சுரேஷ் கூறியதாக தகவல் வெளியான நிலையில் 'நான் அப்படி சொல்லவே இல்லை' என நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கமளித்துள்ளார் .

பெண் இயக்குனரின் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் -  அமலாபால்!

பெண் இயக்குனர் இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவருடன் நமீதா எடுத்த போட்டோஷூட்: வைரல் புகைப்படங்கள்!

 தமிழ் திரையுலகில் அஜித்துடன் 'பில்லா', விஜய்யுடன் 'அழகிய தமிழ்மகன்' உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை நமீதா சமீபத்தில் தனது பிறந்தநாளின் போது தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

40 வயதில் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் அஜித் பட நாயகி: வைரல் வீடியோ

அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை 40 வயதிலும் வேற லெவல் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும் 'பீஸ்ட்' போலவே வசூல் செய்த 'சர்காருவாரி பாட்டா'

விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்த போதிலும் முதல் நாளில் அந்த படம் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதேபோல் சமீபத்தில் வெளியான மகேஷ்பாபுவின்