பாகிஸ்தானால் எனது கனவு நனவாகவில்லை. பிரபல தொழிலதிபருக்கு எஸ்.எஸ்.ராஜமெளலி தந்த தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,April 30 2023]

சிந்து சமவெளி நாகரிகம் குறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி திரைப்படம் எடுக்க வேண்டும் என பிரபல தொழிலதிபர் வேண்டுகோள் விடுத்த நிலையில் பாகிஸ்தானால் தனது கனவு நனவாகவில்லை என்று இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது சமூக வலைதளத்தில் அந்த தொழிலதிபருக்கு பதிலாக பதிவு செய்துள்ளார்

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பல சமூக மற்றும் சமுதாய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவருக்கு கிடைத்த சிந்து சமவெளி நாகரிகம் குறித்த புகைப்படத்தை பதிவு செய்து, இந்த புகைப்படத்தை பார்க்கும் போது சிந்து சமவெளி நாகரிகம் குறித்த ஒரு ஆழமான புரிதலுடன் கூடிய ஒரு திரைப்படத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி எடுத்தால் அது பலருக்கு விழிப்புணர்வாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த எஸ்.எஸ்.ராஜமெளலி, ‘மகதீரா’ திரைப்படம் எடுக்கும் போது தோலாவிரா என்ற பகுதியில் ஒரு பழமையான மரத்தை பார்த்தேன். அது மிகவும் சிதைந்து போயிருந்தது. அப்போது தான் சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை அந்த ஒரே ஒரு மரத்தின் மூலம் விவரிக்கும் வகையில் ஒரு திரைப்படத்தை எடுக்கும் ஐடியா எனக்கு தோன்றியது. ஆனால் அதன்பின் பாகிஸ்தானுக்கு சென்றபோது மொகஞ்சதாரோ செல்ல எனக்கு அனுமதிக்க கிடைக்கவில்லை, அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 

More News

'எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்': பீட்டர் பால் மரணத்திற்கு வனிதாவின் உருக்கமான பதிவு..!

 நடிகை வனிதாவை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட பீட்டர் பால் நேற்று காலமானதை அடுத்து வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

பிறந்த நாளில் கணவருடன் ரொமான்ஸ்.. 'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்காவின் க்யூட் புகைப்படங்கள்..!

 சன் டிவியில் ஒளிபரப்பான 'ரோஜா' என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக இந்த சீரியலில் நாயகி ஆக நடித்த பிரியங்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்

நீச்சல் குளத்தில் பிக்பாஸ் மகேஸ்வரி.. அருகில் ஒரு கோப்பை.. ஹேப்பி சம்மர் போட்டோஷூட்..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விஜே மகேஸ்வரி சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு

ரஜினி-லோகேஷ் கனகராஜ் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுதானா? பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் என்பதும் இதையடுத்து அவர் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி

இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ண போறதில்லை.. 'மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் 'பொலிஷெட்டி' டீசர்..!

நடிகை அனுஷ்கா நடித்து வரும் 'மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் 'பொலிஷெட்டி'  என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்