close
Choose your channels

'தளபதி 65' படத்துடன் கனெக்சன் ஆன சிம்பு-சுசீந்திரன் திரைப்படம்!

Sunday, October 11, 2020 • தமிழ் Comments

சிம்பு நடிப்பில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் அதற்கு முன்னரே இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதையும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சிம்பு-சுசீந்திரன் இணையும் படத்தின் இசை அமைப்பாளர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் எஸ்எஸ் தமன் என்பதும் இவர் ஏற்கனவே தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் பின்வருமாறு:

நடிப்பு: சிம்பு
கதை, திரைக்கதை, இயக்கம் - சுசீந்திரன்
தயாரிப்பு: மாதவ் மீடியா
தயாரிப்பாளர்: பாலாஜி காப்பா
ஒளிப்பதிவாளர் - திரு
இசையமைப்பாளர் - எஸ்.எஸ்.தமன்
எடிட்டர் - ஆண்டனி
தயாரிப்பு வடிவமைப்பு - ராஜீவன்
பாடலாசிரியர் - யுக பாரதி
வசனங்கள் - பாலாஜி கேசவன்

Get Breaking News Alerts From IndiaGlitz