எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்

  • IndiaGlitz, [Sunday,November 19 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' மற்றும் பாகுபலி 2' ஆகிய படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆகி வசூலில் சாதனை புரிந்தது. இந்த நிலையில் அவருடைய அடுத்த படம் என்னவாக இருக்கும், அந்த படத்தின் ஹீரோ யார்? போன்ற கேள்விகள் கடந்த சில மாதங்களாக எழுந்து வந்த நிலையில் தற்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கவுள்ள அடுத்த படத்தில் தெலுங்கு திரையுலகின் இரண்டு முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவர்கள் தான் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ராம்சரண்தேஜா ஏற்கனவே ராஜமெளலி இயக்கிய 'மாவீரன்' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு திரையுலகின் இரு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் இந்த படம் வரலாற்று படமா? அல்லது சமூக படமா? என்பது குறித்த தகவல்கள் மற்றும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெகுவிரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்திய அழகிக்கு உலக அழகி பட்டம்: 17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கிடைத்த கெளரவம்

2017ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்திற்கான போட்டியின் இறுதி சுற்றில் இந்தியாவை சேர்ந்த 20 வயது மனுஷி சில்லார் உலக அழகி பட்டத்தை வென்றார்.

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் பல மாதங்களாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி தற்போது படக்குழுவினர்களால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளராக மாறுகிறாரா மதன்கார்க்கி?

-கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதை வாரிசும் பிரபல கவிஞருமான மதன்கார்க்கி பாடல் எழுதுவதோடு, 'பாகுபலி' உள்பட ஒருசில படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்

தனுஷ்-தேனாண்டாள் பிலிம்ஸ் படம் குறித்த முக்கிய தகவல்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தை அடுத்து ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம், தனுஷ் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

நயன்தாராவும் அவருடைய நயமான கேரக்டர்களும்

கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகர் பல வருடங்கள் ஹீரோவாக நடிக்கலாம், ஆனால் ஒரு நடிகை அதிகபட்சம் ஐந்து வருடங்கள் தாக்குப்பிடிப்பதே கடினம்.