மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு ஸ்டாலின், அண்ணாமலை, வைரமுத்து இரங்கல்.. இறுதிச்சடங்கு எப்போது?


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று இரவு திடீரென மாரடைப்பால் காலமான நிலையில் ஒட்டுமொத்த திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்த நிலையில் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இயக்குனர் வெங்கட் பிரபு, கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் திரு. மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.
இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக தலைவர் அண்ணாமலை: இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா அவர்களின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான திரு. மனோஜ் பாரதி அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
கவியரசு வைரமுத்து:
மகனே மனோஜ்!
மறைந்து விட்டாயா?
பாரதிராஜாவின்
பாதி உயிரே!
பாதிப் பருவத்தில்
பறந்து விட்டாயா?
'சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா'
என்று உனக்கு
அறிமுகப் பாடல் எழுதினேனே
சிங்கம் இருக்கப்
பிள்ளைநீ போய்விட்டாயா?
உன் தந்தையை
எப்படித் தேற்றுவேன்?
"எனக்குக் கடன் செய்யக்
கடமைப்பட்டவனே!
உனக்கு நான் கடன்செய்வது
காலத்தின் கொடுமைடா" என்று
தகப்பனைத் தவிக்கவிட்டுத்
தங்கமே இறந்துவிட்டாயா?
உன் கலைக் கனவுகள்
கலைந்து விட்டனவா?
முதுமை - மரணம் இரண்டும்
காலத்தின் கட்டாயம்தான்.
ஆனால், முதுமை
வயதுபார்த்து வருகிறது;
மரணம் வயதுபார்த்து
வருவதில்லை
சாவுக்குக் கண்ணில்லை
எங்கள் உறக்கத்தைக்
கெடுத்துவிட்டவனே!
உன் உயிரேனும்
அமைதியில் உறங்கட்டும்
இயக்குனர் வெங்கட்பிரபு: "இந்த செய்தியைக் கேட்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது... நீங்கள் இனி இல்லை என்பதை நம்ப முடியவில்லை சகோ. மனோஜ்... சீக்கிரமாகப் போய்விட்டீர்கள்... பாரதிராஜா மாமாவுக்கும் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்."
இந்த நிலையில் மனோஜ் பாரதி ராஜாவின் உடல் தற்போது சேத்துபட்டு இல்லத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும், இன்று மாலை 3 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதன் பிறகு உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது எனது தகவல்கள் கூறுகின்றன.
நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
— M.K.Stalin (@mkstalin) March 25, 2025
தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து… pic.twitter.com/KFnwUPM3tQ
இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா அவர்களின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான திரு. மனோஜ் பாரதி அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
— K.Annamalai (@annamalai_k) March 25, 2025
ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்… pic.twitter.com/tsWYz7qHKS
Really shocking to hear the news.. can’t believe u r no more my brother #manoj gone toooo soon… deepest condolences to @offBharathiraja uncle family and friends 🙏🏽🙏🏽🙏🏽 may ur soul RIP#RIPmanoj #ManojBharthiraja pic.twitter.com/XebSFgKcYF
— venkat prabhu (@vp_offl) March 25, 2025
மகனே மனோஜ்!
— வைரமுத்து (@Vairamuthu) March 26, 2025
மறைந்து விட்டாயா?
பாரதிராஜாவின்
பாதி உயிரே!
பாதிப் பருவத்தில்
பறந்து விட்டாயா?
'சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா'
என்று உனக்கு
அறிமுகப் பாடல் எழுதினேனே
சிங்கம் இருக்கப்
பிள்ளைநீ போய்விட்டாயா?
உன் தந்தையை
எப்படித் தேற்றுவேன்?
"எனக்குக் கடன்… pic.twitter.com/ngB7b1Crel
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments