என்னைப்பற்றி நினைத்தே தூக்கம் இல்லாமல் தவிக்கிறார் ஸ்டாலின்...! எடப்பாடியார் நக்கல் பேச்சு...!

  • IndiaGlitz, [Saturday,April 03 2021]

முதல்வராவோம் என்று ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டு, நித்தம் என்னைப்பற்றி சிந்திப்பதால் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார் என்று ஸ்டாலின் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டலாக பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக,திமுக,அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் கடும் வெயில் என்று பாராமலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பத்தாண்டு காலம் ஆட்சியில் இல்லாத திமுக, இம்முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்போடு, விடியலை நோக்கி என்ற ஸ்டாலினின் குரல் எங்கும் ஒலித்து வருகிறது. 234 தொகுதிகளிலும் கட்டாயம் வெற்றிபெறுவோம் என்று கூறி வாக்குகள் சேகரித்து வருகிறார் முக.ஸ்டாலின். முக்கியமாக அதிமுக-வை வெற்றிபெற விடக்கூடாது என்பதில் மிகுந்த முனைப்பு காட்டி வருகிறார்.

இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் திமுக-வை பற்றி பேசி புரட்டி எடுத்து வருகிறார் என்று சொல்லலாம். ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று பகல் கனவு காண்கிறார். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்று கூறுகிறார். அவர் எத்தனை அவதாரம் எடுத்தாலும் கனவு பலிக்காது. தினமும் என்னைப்பற்றியே நினைத்து பேசிவரும் ஸ்டாலின், தூக்கமில்லாமல் தவித்து வருகிறார் போல என்று பழனிச்சாமி அவர்கள் கிண்டலாக பேசியுள்ளார். மேலும் நீங்கள் என்னை சந்திக்க வேண்டுமென்றால் , உடனே சந்திக்கலாம், நான் உங்களில் ஒருவன். ஆனால் ஸ்டாலின் வீட்டு கேட்டை கூட உங்களால் தொட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
 

More News

குக் வித் கோமாளி: இன்றைய நிகழ்ச்சியில் பவித்ராவுடன் வந்த இளைஞர் யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் இன்றும் நாளையும் செலிபிரிட்டி வாரம் என்பது தெரிந்ததே. இந்த வார நிகழ்ச்சியில் குக்-களுடன் அவர்களுடைய உறவினர்கள் மற்றும்

நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டே ப்ரேக்பாஸ்ட்: ஷிவானியின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தொலைக்காட்சி நடிகையுமான ஷிவானி நாராயணன் சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டே அவர் பிகினி

எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பிரபல தமிழ் நடிகை!

சமீபத்தில் வெளியான சந்தோஷ் நாராயணனின் எஞ்சாய் எஞ்சாமி என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெருக்குறள் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் மகள் தீ பாடிய இந்த

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா: பிரச்சாரங்கள் ரத்து

திமுக எம்பி கனிமொழி அவர்களுக்கு கொரனோ தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 

எனது இளையமகள் இவர்தான்: ஷகிலாவின் நெகிழ்ச்சியான அறிவிப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பதும் விரைவில் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெறும் என்பதும் தெரிந்ததே