மு.க.ஸ்டாலின் சந்திப்பு எதிரொலி: ரகசிய வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி உத்தரவா?

  • IndiaGlitz, [Thursday,February 23 2017]

தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஜனநாயக படுகொலை நடந்ததாகவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை ஏற்காமல் தாங்கள் சபைக்காவலர்கள் மற்றும் போலீசாரால் வெளியேற்றப்பட்டதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் சற்றுமுன்னர் அவர் டெல்லியில் கடந்த சனியன்று நடந்த சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களிடம் விளக்கியுள்ளார். ஏற்கனவே தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களின் அறிக்கையை பெற்றுள்ள ஜனாதிபதி, தமிழக சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோருவார் என்று டெல்லி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி அவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் குறித்த விபரங்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச்செயலகத்தில் போட்ட முதல் கையெழுத்து '500 டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவு என்பது அறிந்ததே...

அமைச்சர் ஜெயகுமாருக்கு கூடுதல் பொறுப்பு. நிதியமைச்சரும் அவர்தான்

மீன் வளத்துறை அமைச்சராக இதுவரை இருந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு கூடுதலாக நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதால் அவருடைய துறையை இதுவரை முதல்வரே ஏற்றிருந்தார்...

சீமக்கருவேல மரங்களை அழிக்கும் நடவடிக்கையில் விஷால்

தமிழகத்தை எதிர்நோக்கியுள்ள அபாயங்களில் மிகவும் முக்கியமானது சீமக்கருவேல மரங்கள். பொன் விளையும் பூமியை மலடாக்கும் அபாயம் இந்த சீமக்கருவேல மரங்களால் உண்டு என்பதால் இதுகுறித்த விழிப்புணர்வை சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் இடையே பரப்பி வருகின்ரனர். குறிப்பாக மாணவர்கள், சமூக நல ஆர்வலர்கள், ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் சீமக்க&#

தவறு செய்த முன்னாள் முதல்வரின் கூட இருந்ததால் சின்னம்மா தண்டிக்கப்பட்டார். அதிமுக பிரமுகர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தலைமையிலான அரசை சிறையில் இருக்கும் சசிகலா ஆட்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். சிறையில் இருந்து சசிகலா இடும் கட்டளையை முதல்வர் நிறைவேற்றி வருவதாகவும் இது ஒரு பினாமி அரசு என்றும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது...

புதுக்கட்சி தொடங்குகிறார் தீபா. தீபக்கிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம். என்ன ஆச்சு தமிழ்நாட்டுக்கு?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நாளை ஜெயலலிதாவின் பிறந்த நாளில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும், கட்சியின் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாளை மாலை 6 மணிக்கு புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தீபா தெரிவித்துள்ளார்...