ச்சே என்ன மனுசன்யா.. ..சீமானுக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின்...! இணையத்தில் வைரலாகும் வீடியோ...!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள், சீமானுக்கு தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் அவர்களின், சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூர் என்ற கிராமம் தான். அவரது தாயும், தந்தையும் அங்குதான் வசித்து வருகிறார்கள். தந்தையின் பெயர் செந்தமிழன், வயது 90. சில நாட்களுக்கு முன் சீமான் அவர்களின் தந்தைக்கு உடல்நிலைக்குறைபாடு ஏற்பட, வயது முதிர்வு காரணமாக இன்று காலை அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார் சீமான். தந்தையின் உடலைப் பார்த்து சீமான் அவர்கள் கதறி அழுத காட்சி, பார்ப்போரை கண் கலங்கச் செய்தது. சீமான் அவர்களின் தந்தை இறப்பிற்கு, அரசியல் பிரமுகர்கள், கட்சித்தொண்டர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் முதல்வர் முக.ஸ்டாலின் , சீமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது போனில் பேசிய ஸ்டாலின் தைரியமாக இருங்கள், நாங்கள் இருக்கிறோம், கண் கலங்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அப்பொழுது பேசிய சீமான், "நீங்க துணையா இருக்கிறது பெருமையா இருக்கு" என்று கண்ணீர்விட்டு அழுதார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் "அந்த மனசு தான் சார் கடவுள், என்ன மனுஷன்யா உள்ளிட்ட கமெண்ட்களை பதிவிட்டு முதல்வரை பாராட்டி வருகிறார்கள்.
முதல்வராக பதவியேற்றத்திலிருந்து, ஸ்டாலின் அவர்களின் பொறுமையான அணுகுமுறை மற்றும் நடவடிக்கைகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அரசியலில் ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும், சீமானுக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறிய விதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.