close
Choose your channels

'அவெஞ்சர்ஸ்' படத்தை பார்க்காமலேயே மறைந்த ஸ்டேன் லீ

Saturday, May 18, 2019 • தமிழ் Comments

மார்வெல் படங்களின் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியவர் ஸ்டென் லீ என்பது அனைவரும் அறிந்ததே. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தன்னுடைய 95வது வயதில் காலமானார்.

இந்த நிலையில் மார்வெல் சூப்பர் ஹீரோவின் ஒவ்வொரு படத்தையும் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே ஸ்டேன்லீ பார்த்துவிடுவார் என்றும், அதேபோல் 'அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம்' படத்தையும் பார்க்க அவர் ஆவலுடன் இருந்ததாகவும், ஆனால் அதற்கு முன்னரே அவர் துரதிஷ்டவசமாக மறைந்துவிட்டதாகவும் மார்வெல் ஸ்டுடியோவின் நிறுவனர் கெவின் இணையதள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஸ்டேன் லீ  கார் டிரைவராக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தன்னுடைய கேரக்டரை அவர் திரையில் பார்க்க மிகவும் ஆர்வமுடன் இருந்ததாகவும், ஆனால் அது கடைசி வரை நடைபெறாமல் போய்விட்டதாகவும் ஸ்டேன் லீ மகள் தெரிவித்துள்ளார். மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களின் வரிசையில் கடைசியாக வெளிவந்துள்ள 'அவெஞ்சர்ஸ்' திரைப்படத்தை, சூப்பர்ஹீரோக்களை உருவாக்கியவரே பார்க்க முடியாமல் போன சோகமான செய்தி அறிந்து மார்வெல் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz