close
Choose your channels

பிரபல நடிகரின் ஸ்டைலில் தல தோனி: பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

Thursday, July 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ’தல’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான தோனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கிரிக்கெட் பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெலுங்கு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரபல நடிகரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றில் தோனியின் முகத்தை இணைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தி வாரியர்’. இந்த படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

அந்த வகையில் ராம் பொத்தினேனி ரயிலில் நிற்கும் ஸ்டைலிஷ் போஸ்டர் ஒன்றை அப்படியே எடுத்து அதில் தோனி முகத்தை மாற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெலுங்கு தனது சமூக வலைத்தளத்தில் தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.