பிரபல நடிகரின் ஸ்டைலில் தல தோனி: பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

  • IndiaGlitz, [Thursday,July 07 2022]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ’தல’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான தோனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கிரிக்கெட் பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெலுங்கு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரபல நடிகரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றில் தோனியின் முகத்தை இணைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தி வாரியர்’. இந்த படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

அந்த வகையில் ராம் பொத்தினேனி ரயிலில் நிற்கும் ஸ்டைலிஷ் போஸ்டர் ஒன்றை அப்படியே எடுத்து அதில் தோனி முகத்தை மாற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெலுங்கு தனது சமூக வலைத்தளத்தில் தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்: சொன்னது யார் தெரியுமா?

இசைஞானி இளையராஜாவுக்கு நேற்று மத்திய அரசு நியமன ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தது என்பதும், இதனையடுத்து திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர்

இவர் தான் விஜய்யின் மச்சினிச்சியா? வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'கேசினோ' பர்ஸ்ட்லுக் போஸ்டர்: காமிக்ஸ் வடிவில் கலக்கல்

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும்  வாணி போஜன் நடிக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.

இசைஞானி இளையராஜாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பதவி: பிரதமர் மோடி வாழ்த்து!

பாராளுமன்றத்தின் நியமன எம்பியாக இசைஞானி இளையராஜா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் 

முதல் படமே இவ்வளவு பெரிய வியாபாரமா? 'தி லெஜண்ட்' படத்தின் ஆச்சரிய தகவல்

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.