ஆல்பாஸ் அரியர் செல்லாது: யுஜிசி திட்டவட்டம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்வுக்கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் அரியர் மாணவர்களை தேர்ச்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி பதிவு செய்த வழக்கு தற்போது சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இறுதி செமஸ்டர் மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

இறுதி பருவ தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியம் எனவும் உயர்நீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளதால் அரியர் மாணவர்கள் பாஸ் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு செல்லாது என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் தேர்ச்சி பெற்றதாக நினைத்துக்கொண்டிருக்கும் அரியர் மாணவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

More News

சென்னையில் இன்று மாலை வரை கனமழை தொடரும்: தமிழ்நாடு வெதர்மேன்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் நேற்று முதல் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது 

சென்னையில் தோன்றிய சிகப்பு தக்காளி: கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்!

சென்னையில் கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் கனமழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 

கடைசியில ரம்யா பாண்டியனையும் அழவைச்சிட்டாங்களே பிக்பாஸ்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த 3 சீசன்களிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக நேற்று பாலாஜி மற்றும் அர்ச்சனா ஆகியோர்

ரஜினி அரசியலுக்கு வரவில்லையா? வைரலாகும் கடிதத்தால் பரபரப்பு

ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு, தான் உறுதியாக அரசியலுக்கு வரவிருப்பதாகவும் ஆன்மிக அரசியலை தொடங்க இருப்பதாகவும்

தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்… சென்னைக்கும் பாதிப்பா???

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.