close
Choose your channels

வெளியில் செல்லாதீர்கள்.. நாம் விடுமுறையில் இல்லை..! சச்சின் டெண்டுல்கர்.

Thursday, March 26, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் 180 நாடுகளுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸினால் இன்று வரை 4,91,775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 22 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இந்த வைரசை மேலும் பரவாமல் கட்டுப்படுத்த இந்திய அரசானது நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவினை செயல்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியா போன்ற 130 கோடி மக்களுள்ள நாட்டில் ஊரடங்கினை முழுவதுமாக பின்பற்ற முடியாமல் உள்ளது என காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மக்களுக்கும் தனது ரசிகர்களுக்கும் வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் என கோரிக்கை வைத்துள்ளார். "இது விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மக்கள் எல்லோரும் வெளியில் செல்வதை நான் காணமுடிகிறது. அடுத்து வரும் 21 நாட்கள் நானும் என் குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருக்கப்போகிறோம். அதை போலவே நீங்களும் பின்பற்றுங்கள்" என கூறியுள்ளார்.

View this post on Instagram

नमस्ते,‬ ‪हमारी सरकार ने हम सभी से ये विनती की है कि अगले २१ दिनों तक हम सब अपने घरों से ना निकलें। फिर भी बहुत लोग इस निर्देश का पालन नहीं कर रहे हैं। इस मुश्किल समय में हम सबका ये कर्तव्य है कि हम घरों में रहें और यह समय अपने परिवार के साथ बिताएं और #CoronaVirus का खात्मा करें।

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos