மீண்டும் வருவேன். நம்புங்கள்: சிம்பு வெளியிட்ட பரபரப்பு வீடியோ

  • IndiaGlitz, [Sunday,November 12 2017]

நடிகர் சிம்பு பாடிய பணமதிப்பிழப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து சிம்புவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் சமூக வலைத்தளத்தில் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். 'சக்க போடு போடு ராஜா' படத்தின் பாடல்களுக்கும், டிரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கொடுத்ததிற்கு நன்றி. உங்கள் அனைவரிடமும் பேசி நீண்ட நாட்களாச்சு, அதனால் பேச வேண்டும் என தோன்றியது. எனது மற்ற பாடலுக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்து வருகிறீர்கள்.

சமூகவலைத்தளத்தில் இல்லாததால் ரசிகர்களிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நீங்கள் அனைவருமே இருக்கும் போது பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது படத்தின் கெட்டப் எல்லாம் கிடையாது. வேறொரு விஷயம் சீக்கிரத்திலேயே வருகிறது. மீண்டும் வருவேன். நம்புங்கள்!

இவ்வாறு சிம்பு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்

More News

சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: கலெக்டர்கள் உத்தரவு

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

25 வருட சினிமா பயணம்: விஜய்யை சிறப்பிக்கும் 'தளபதி யுகம்' பாடல்

தளபதி விஜய் திரையுலகில் அறிமுகமாகி 25 வருடங்கள் பூர்த்தி ஆனதை அடுத்து அவரது திரையுலக பயணத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று ஒரு பாடல் வெளியாகியுள்ளது.

என் வாழ்க்கையே ஒரு வட்டம் தான். விஷால்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் விஷாலின் அடுத்த படமான 'இரும்புத்திரை' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ரஜினியுடன் இணைந்து அரசியல் பயணம் சாத்தியமா? கமல் பதில்

கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளில் உள்ளார். வரும் ஜனவரி முதல் ஒவ்வொரு செய்தியாக வரும் என்று அவர் ஏற்கனவே கூறியுள்ளதால் அவருடைய கட்சி அடுத்த ஆண்டு உதயமாகும்

சிங்கம் குகையில் இல்லாத போது அரசியல் செய்கிறார் கமல்: சரத்குமார்

உலக நாயகன் கமல்ஹாசன் இனிமேலும் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வியை எழுப்ப அவசியமில்லாத வகையில் விறுவிறுப்பாக அரசியல் பணியை படிப்படியாக செய்து வருகிறார்.