சிம்புவின் 'AAA' படத்தின் ஓப்பனிங் வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,June 26 2017]

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புடனும், கடைசி நேர டென்ஷன்களையும் மீறி கடந்த வெள்ளியன்று வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு பெரும்பாலும் கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

இந்த படத்தின் முதல் நாள் வசூல் திருப்திகரமாக இருந்தபோதிலும் படிப்படியாக வசூல் குறைந்ததாக விநியோகிஸ்தர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த படம் கடந்த வார இறுதியில் சென்னையில் 22 திரையரங்குகளில் 278 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,13,83,190 வசூலித்துள்ளது. திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யா-ஜோதிகாவுக்கு ரூட் க்ளியர்

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடித்து வந்த 'மகளிர் மட்டும்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முற்றிலும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது...

விஜய்யின் 'மெர்சலில்' இணைந்த இன்னொரு விஐபி

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முடிக்கும் நிலையில் உள்ளார்...

தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை: 'விவேகம்' செய்த சாதனை

தல அஜித் நடித்து வரும் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைத்து இணையதள சாதனைகளையும் அடித்து நொறுக்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அஜித், சிறுத்தை சிவா உள்பட படக்குழுவினர் மீண்டும் ஐரோப்பா சென்றுள்ளனர்...

பிரபல நட்சத்திர தம்பதி வீட்டில் ரூ.7 கோடி பழைய நோட்டுக்கள் சிக்கியதா?

டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா நட்சத்திர தம்பதி வீட்டின் மாடியில் கடந்த ஆண்டு மத்திய அரசு செல்லாது என்று அறிவித்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் ரூ.7 கோடி அளவிற்கு சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது...

கார்த்தியின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த ஆண்டு கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது....