'வேண்டாம்' என்று பெயர் வைத்த பெற்றோர்: 'வேண்டும்' என்று கூப்பிட்ட ஜப்பான்!

  • IndiaGlitz, [Friday,July 12 2019]

திருத்தணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெண் குழந்தைக்கு 'வேண்டாம்' என்று அந்த பெண்ணின் பெற்றோர் பெயர் வைத்தனர். ஆனால் இந்த பெண்ணை தற்போது ஜப்பான் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு அழைத்துள்ளது

திருத்தணி அருகே உள்ள நாராயணபுரம் என்ற கிராமத்தில் பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு 'வேண்டாம்' என்று பெயர் வைத்துவிட்டால் அடுத்த குழந்தை ஆண் குழந்தையாக பிறக்கும் என்பது ஒரு நம்பிக்கை. அவ்வாறு 'வேண்டாம்' என்று பெயர் வைக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை பள்ளிப்படிப்பை சக தோழிகளிலும் கேலி, கிண்டல்களுக்கு நடுவே முடித்தார்.

அதனையடுத்து இஞ்சினியரிங் கல்லூரியில் மூன்றாவது ஆண்டு படித்து வரும் மாணவி 'வேண்டாம்', சமீபத்தில் கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்து கொண்டார். அவரது திறமையை பார்த்த ஜப்பான் நிறுவனம் ஒன்று அவரை ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு எடுத்து கொண்டது. இஞ்சினியரிங் படிப்பு முடிந்தவுடன் 'வேண்டாம்' ஜப்பானுக்கு செல்லவுள்ளார். பெற்றோர் 'வேண்டாம்' என்று பெயர் வைத்தாலும் ஜப்பான் நிறுவனம் அவரை வேண்டும் என்று கூறி வேலைக்கு எடுத்துள்ளது

இதுகுறித்து பேட்டி அளித்த மாணவி 'வேண்டாம்', தன்னைப்போலவே இதே பெயருடன் தனது கிராமத்தில் பல பெண்கள் இருப்பதாகவும், அவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்தார்

More News

பட்டாம்பூச்சி நடனமாடும் பட்டாம்பூச்சி லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டின் இன்னொரு ஓவியாவாகவும், கள்ளங்கபடம் இன்றி சிரித்த முகத்துடனும் இருக்கும் ஒரே போட்டியாளர் லாஸ்லியா. ஜாலியாகவும் புத்திசாலித்தனத்துடனும்

வனிதாவுக்கு மணிகட்டிய தர்ஷன்: உடைகிறது அகம்பாவ சாம்ராஜ்யம்

பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தபோதும் சரி, கேப்டனாக இல்லாத போதும் சரி குரலை உயர்த்தி, தான் என்ற அகங்காரத்துடன் வீட்டில் வலம் வரும் ஒரே கேரக்டர் வனிதாதான்.

'பிகில்' படத்தில் ஷாருக்கானுக்கு பதில் நடிக்கும் பிரபலம் இவர்தான்!

விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாகவும், பின்னர் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடவிருப்பதாகவும்,

அஜித், சூர்யா பட நாயகிக்கு பெண் குழந்தை!

அஜித் நடித்த 'அசல்', சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்த நடிகை சமீரா ரெட்டிக்கு கடந்த 2015ஆம் ஆண்டு அக்சய்

சந்தானம் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

காமெடி நடிகராக இருந்தபோது வருடத்திற்கு பத்து படங்களுக்கும் மேல் நடித்து கொண்டிருந்த சந்தானம், ஹீரோவான பின்னர் வருடத்திற்கு ஒரு படம் வெளிவருவதே அரிதாக உள்ளது