அன்னையர் தினத்தை கொண்டாட அசத்தலான வாய்ப்பு… மாசில்லா அன்பை போற்றுவோம!

  • IndiaGlitz, [Wednesday,May 05 2021]

உயிரினத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் உயர்வாகப் பேசப்படும் ஒரு உறவு என்றால் அது அன்னைதான். காரணம் அன்னை எனும் தாய்மையில் 100 வயது கிழவன்கூட பாதுகாப்பையும் அக்கறையையும் பாசத்தையும் உணருகிறான். இந்தத் தாய்மையில் மட்டும்தான் மனிதன் முதற்கொண்டு அனைத்து ஜீவராசிகளும் எந்த எதிர்ப்பார்ப்புமே இல்லாமல் நூறு சதவீதம் உண்மையான அன்பை அனுபவிக்க முடிகிறது.

இத்தகைய தாய்மையைப் போற்றும் அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உங்களது அம்மாவைப் பற்றி உங்களது மொழியில் உங்கள் குரலில் உங்களது கருத்துக்களைப் 59 வினாடிகளுக்கு பதிவு செய்து ஆடியோவை vaarta ஆப்பிற்கு அனுப்புங்கள். இதன்மூலம் நம்பமுடியாத பரிசுகளையும் வெல்லுங்கள். இதற்கு உங்களது செல்போனில் vaarta ஆப்பை பதிவிறக்கம் செய்து அன்பான அம்மாவிற்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள்.

அன்னையர் தினக் கொண்டாட்டத்தை முதன் முதலில் அமெரிக்காவை சேர்ந்த அன்னா மேரி ஜர்விஸ் என்பவர்தான் கொண்டு வந்தார். அதாவது அன்னா மேரி தனது தாயான அன்னா மரியா ஜீவ்ஸ் ஜர்விஸ் என்பவரது முயற்சியைப் பாராட்டும் விதமாக பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் கொண்டு வந்த ஒரு விழாதான் இந்த அன்னையர் தினம்.

மரியா ஜீவ்ஸ் அமெரிக்காவில் குழந்தை இறப்பை குறைப்பதற்கும் பெண்களுக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் மதர்ஸ் டே வொர்க் கிளப் எனும் அமைப்பை துவக்கி அதன் மூலம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இந்த அமைப்பின் வழியாக பெண்களுக்கு மருத்துவ பயிற்சி கொடுத்தும் அதோடு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தி வந்தார். இப்படி குழந்தைகளின் நலன் மீது அக்கறை செலுத்தும் அன்னையர்களுக்கு ஒரு நாள் கண்டிப்பாக “அன்னையர் தினம்“ கொண்டாடப்படும் என்றும் அவர் ஒரு பயிற்சி வகுப்பில் கூறி இருந்தார்.

தனது தாயின் இறப்பிற்கு பிறகு அன்னா மேரி தனது தாய் சொன்னவாறே அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என முடிவெடுத்தார். அதோடு தனது அன்னையின் 25 ஆண்டுகால சேவைக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் முடிவெடுத்தார். இதனால் கடந்த 1908 மே 10 ஆம் தேதி தனது தாய் பணியாற்றி சர்ச்சுக்கு அனைத்துப் பெண்களையும் வரவழைத்து அவர்களது கைகளில் பூச்செண்டுகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இந்த தினத்தை அன்னையர் தினமாக அறிவிக்க வேண்டும் எனவும் அன்னா மேரி பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்தார். இதையடுத்து அமெரிக்காவின் 28 ஆவது அதிபராக இருந்த தாமஸ் வில்சன் மே 10 ஆம் தேதி அன்னயைர் தினம் கொண்டாடப்படும் எனும் பிரகனடத்தை அறிவித்ததோடு அன்றைய தினம் விடுமுறை நாளாக கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை “அன்னையர் தினம்’‘ கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த அழகான நாளை சிறப்பிக்க உங்களது அன்னையைப் பற்றிய நினைவுகளையும் கருத்துகளையும் உங்களது குரலில் பதிவு செய்து அதை vaarta ஆப்பிற்கு அனுப்பி பரிசுகளை வெல்லுங்கள். மாசில்லாத அன்பை போற்றுவோம்.