close
Choose your channels

360 டிகிரி 32 நொடிகள்: அஜித்தின் 'துணிவு' படத்தின் ஆச்சரிய தகவல்!

Monday, December 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து முடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் 360 டிகிரி கோணத்தில் 33 நொடிகள் கொண்ட ஸ்டண்ட் காட்சிகளை வித்தியாசமாக படமாக்கி உள்ளதாக ஸ்டண்ட் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அஜீத் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘துணிவு’. இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று இந்த படத்தில் இடம்பெற்ற ’கேங்ஸ்டா’ என்ற பாடல் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்து இருக்கும் சுப்ரீம் சுந்தர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’இந்த படத்தில் 360 டிகிரி டெக்னிக் ஒன்றை பயன்படுத்தி உள்ளதாகவும் குறிப்பாக 32 நொடிகள் கொண்ட ஒரு சிங்கிள் ஷாட்டில் அஜித் ஸ்டண்ட் காட்சியில் தத்ரூபமாக நடித்து உள்ளதாகவும் இந்த காட்சி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அஜித் ஸ்டண்ட் காட்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என்றும் ஸ்டண்ட் நடிகர்கள் சிலர் தவறு செய்ததால் அடுத்த ஷாட்டை எடுத்த போதும் அவர் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி நடித்துக் கொடுத்தார் என்றும் சில காட்சிகள் 13 டேக் வரை கூட எடுக்கப்பட்டது என்றும் அப்பொழுதும் அவர் முழு ஒத்துழைப்பு தந்தார் என்றும் சுப்ரீம் சுந்தர் தெரிவித்துள்ளார்.

’செல்லா செல்லா’ ’காசே தான் கடவுளடா மற்றும் ’கேங்ஸ்டா’ ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் மூன்று பாடல்களும் மிகப் பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித், மஞ்சுவாரியர், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் போனிகபூர் தயாரித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.