close
Choose your channels

ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் ஸ்டண்ட் இயக்குனர்கள்!

Wednesday, January 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்கள் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்திருப்பதாகவும் அந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அன்பு மற்றும் அறிவு என்ற இரட்டையர்கள் அன்பறிவ் என்ற பெயரில் திரைப் படங்களில் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணிபுரிந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. மெட்ராஸ், கபாலி, இருமுகன், கேஜிஎஃப், தடம், மிஸ்டர் லோக்கல், கத்தி உள்பட பல திரைப்படங்களுக்கு இரட்டையர்கள் அன்பறிவ் சண்டை இயக்குனர்களாக பணிபுரிந்துள்ளனர்.

தற்போது எதற்கும் துணிந்தவன், கேஜிஎப் சாப்டர் 2, விக்ரம், பீஸ்ட் உள்பட ஒரு சில திரைப்படங்களில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவ் தற்போது ஒரு திரைப்படத்தை முதன்முதலாக இயக்க உள்ளனர். இந்த படம்தான் ராகவாலாரன்ஸ் நடிக்கவுள்ள ‘துர்கா’ என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அன்பறிவ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.