close
Choose your channels

'தளபதி 65' படம் வந்ததும் 'கேஜிஎப்' படத்தை எல்லாரும் மறந்துருவிங்க: ஸ்டண்ட் இயக்குனர்!

Wednesday, February 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படமான ’தளபதி 65’ திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ’பேட்ட’ வில்லன் நவாசுதீன் சித்திக் வில்லனாகவும் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவ் என்ற இரட்டையர்கள் பணிபுரிய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் ஏற்கனவே ‘கேஜிஎப்’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு பணிபுரிந்துள்ளனர் என்பதும் ‘கேஜிஎப்’ படத்தில் சிறப்பாக ஸ்டண்ட் அமைத்ததற்காக தேசிய விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அன்பறிவ் ஸ்டண்ட் குழுவில் உள்ள ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’அடுத்த வருடம் நீங்கள் ’கேஜிஎப்’ ஸ்டண்ட் காட்சிகளை மறந்து விடுவீர்கள் என்றும் ’தளபதி 65’ சண்டைக் காட்சிகள் மட்டுமே பேசுவீர்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

‘தளபதி 65 படத்தில் அன்பறிவ் பணிபுரியவுள்ளது உறுதி செய்யப்பட்டால் விஜய்யுடன் முதன் முதலாக தேசிய விருது பெற்ற அன்பறிவ் பணிபுரிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.