'பிகில்' படத்தில் இணைந்த பிரபல தொழில்நுட்ப கலைஞர்!

  • IndiaGlitz, [Monday,September 30 2019]

தளபதி விஜய் நடித்த 'பிகில் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது முழுவீச்சில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது 'பிகில்' படத்தின் டீஸர் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும், டீசரின் சென்சார் பணிகள் முடிவடைந்தவுடன் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் 'பிகில்' படத்தின் ஆங்கில சப் டைட்டில் அமைக்க பிரபல சப்டைட்டில் கலைஞர் ரேகா அவர்கள் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே ரஜினி, கமல், அஜீத், விஜய் உள்பட முக்கிய பிரபலங்கள் நடித்த சுமார் 500 படங்களுக்கும் மேல் சப்டைட்டில் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விஷ்ணு ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
 

More News

'தளபதி 64' படத்தின் முதல் அதிகாரபூர்வ தகவல்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு

'தல' மாதிரியே 'தல' ரசிகர்களும் நல்லவங்க: பிக்பாஸ் அபிராமி

சமீபத்தில் பேனர் கலாச்சாரத்தால் சென்னை இளம்பெண் பரிதாபமாக மரணம் அடைந்த நிலையில் மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் இனிமேல் தங்கள் விருப்பத்திற்குரிய நடிகரின் படங்கள் வெளியாகும்போது

'தர்பார்' படப்பிடிப்பில் 'லதா ரஜினி': வைரலாக்கும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மும்பை, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில்

எங்க அப்பா செஞ்சது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது: லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த வீட்டில் இந்த 100 நாட்களில் தங்களுடைய அனுபங்கள் குறித்து ஒவ்வொரு போட்டியாளரும் தெரிவித்து வருகின்றனர்

இப்படி சொன்னிங்கன்னா நடக்கிறதே வேற! விஜய் ரசிகருக்கு செல்ல மிரட்டல் விடுத்த திரையரங்கம்

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்த்த திரைப்படங்களில் ஒன்று என்பதால் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு