2024 பாராளுமன்ற தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்: பிரபல அரசியல்வாதி கோரிக்கை

தல தோனியும், சின்னத்தல சுரேஷ் ரெய்னாவும், அடுத்தடுத்து நேற்று தங்களது ஓய்வு முடிவை அறிவித்தால் இந்திய கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போட்டிகளில் 2022 ஆம் ஆண்டு வரை விளையாடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே.

இதனை அடுத்து தோனியின் அடுத்த கட்ட திட்டம் என்னவாக இருக்கும் என்பதே அவரது அனைத்து ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் பாஜக பிரமுகரும், ராஜ்யசபா எம்பிமான சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் ’தோனி வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வேண்டும்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் மேலும் கூறியபோது ’தோனி கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் ஓய்வு பெற்றுள்ளார். மற்றவர்களிலிருந்து அல்ல. அவரது திறமையான தலைமையைப் பயன்படுத்தி முரண்பாடுகளுக்கு எதிராக போராட முடியும். கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் நிரூபித்த எழுச்சியூட்டும் தலைமை பொது வாழ்க்கையிலும் கண்டிப்பாக தேவை. எனவே அவர் வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாஜக பிரமுகரான சுப்பிரமணியம் சுவாமி, தோனியை அரசியலுக்கு அழைத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கௌதம் காம்பீர், நவ்ஜோத் சிங் சித்து, முகமது அசாரூதின் உள்பட பலர் அரசியலில் குதித்து தற்போது நல்ல பதவிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தோனியும் அரசியலுக்கு செல்வாரா? அல்லது கிரிக்கெட் பயிற்சியாளர், வர்ணனையாளர் என தனது வாழ்நாள் முழுவதையும் கிரிக்கெட்டுக்கு அர்ப்பணிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஓய்வை அறிவித்த தல, சின்னத்தல: சிஎஸ்கே வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ

தல தோனி மற்றும் சின்னத்தல ரெய்னா ஆகிய இருவரும் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து ஓய்வு முடிவை அறிவித்ததால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: நாக்கை துண்டித்து கண்களை தோண்டிய கொடுமை 

உத்தரபிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு துண்டிக்கப்பட்டு கண்கள் தோண்டப்பட்டு பிணமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த நிஜ 'மெர்சல்' டாக்டர் காலமானார்: சோகத்தில் சென்னை மக்கள் 

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டராக விஜய் நடித்து இருப்பார் என்பது தெரிந்ததே. அந்த நிலையில் நிஜமாகவே ஐந்து ரூபாய்க்கு மருத்துவம்

சிவகார்த்திகேயனை தோனியுடன் ஒப்பிட்ட பிரபல இயக்குனர்!

தல தோனி அவர்கள் நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பதும் அவரது முடிவிற்கு பலர் வருத்தத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பதும் தெரிந்ததே. 

எவ்வளவு கண்ணீரை கட்டுப்படுத்தி இருப்பீர்கள்: சாக்‌ஷி தோனியின் உருக்கமான பதிவு

தல தோனி அவர்கள் நேற்று திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்தார் என்பதும் அவரது முடிவால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர் என்பதும் தெரிந்ததே