மு.க.ஸ்டாலினைவிட அவரது மனைவி நல்லவர். சுப்பிரமணியன் சுவாமி

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி இன்று பிபிசி ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டி ஃபேஸ்புக் லைவ் மூலம் சற்று முன்னர் ஒளிபரப்பப்பட்டது.

இந்த பேட்டியில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருக்கும் நிலையில் கட்சியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள செயல்தலைவர் ஸ்டாலின் குறித்து என்ன நினைக்கின்றீர்கள் என்று கேட்ட கேள்விக்கு தனக்கு ஸ்டாலினுடன் அதிக பழக்கமில்லை என்றும் அவரது அரசியல் நடவடிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.

மேலும் ஸ்டாலினை விட அவரது மனைவி நல்லவர் என்றும், அவரது குடும்பத்தில் அனைவரும் கடவுளை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவர் மட்டும் கோவில்களுக்கு சென்று கடவுளை வணங்கி வருவதாலும், துர்கா என்ற பெயருக்கேற்ப நடந்து கொள்வதாலும் அவரை நல்லவர் என்று தான் கூறுவதாக தெரிவித்தார். ஸ்டாலினும் கடவுளை வணங்கி தன்னை இந்து கூறினால் அவரையும் நல்லவர் என்று தான் கூறுவேன் என்றும் சுவாமி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

More News

டெல்லியில் மோடி-தம்பிதுரை சந்திப்பு. என்ன பேசினார்கள்?

தமிழக கவர்னரை இன்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ள நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பிரதமர் மோடி அவர்களை சந்தித்துள்ளார்....

ஆளுனர் மாளிகையில் ஓபிஎஸ். ராஜினாமா குறித்து விளக்கம் அளிப்பார் என தகவல்

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ் சற்று முன்னர் மும்பையில் இருந்து சென்னை வந்தடைந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு கவர்னரை சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டிருந்தது...

ஈசிஆர் ரிசார்ட்டில் நடப்பது என்ன?

ஒருபக்கம் அடுத்த முதல்வர் யார் என்ற ரேஸில் முந்தப்போவது ஓபிஎஸ் அவர்களா? சசிகலா அவர்களா? என்ற பரபரப்பில் தமிழகமே இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் முதல்வரை தேர்வு செய்ய வேண்டிய அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்கு, எப்படி உள்ளார்கள் என்பது குறித்து வெளிவந்த தகவல்களை பார்ப்போம்...

மன உளைச்சலால் மேலும் ஒரு பிரபல நடிகை தற்கொலை

நடிகைகளின் வாழ்க்கை முறையை வெளியில் இருந்து பார்க்கும்போது ஆடம்பரமாக தெரிந்தாலும், பல நடிகைகள் மிகுந்த மன உளைச்சலுடன் தான் இருந்துள்ளார்கள் என்பது அவ்வப்போது வரும் நடிகைகளின் தற்கொலையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ச்சியாக ஏற்படும் மன உளைச்சல் காரணமாக சில்க் ஸ்மிதா உள்பட பல நடிகைகள் தற்கொலை செய்துள்ள நிலைய&#

சசிகலா முதல்வராக தடை கோரிய வழக்கு. சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு

தமிழகத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஒருபக்கம் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இன்னொரு பக்கம் சசிகலாவுக்கு அதரிச்சி தரும் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே உள்ளது.