கமல்ஹாசனை அடுத்து கருணாநிதியை வம்புக்கு இழுத்த சுப்பிரமணியன் சுவாமி

  • IndiaGlitz, [Tuesday,March 14 2017]

கடந்த சில நாட்களாக கமல்ஹாசனுடன் டுவிட்டர் போர் செய்து கொண்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போது கருணாநிதி, கச்சத்தீவை தாரை வார்க்க அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியிடம் பணம் பெற்றதாக திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியின் பேட்டி, அறிக்கை, டுவிட்டர் பதிவுகள் அவ்வப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவில் மரணத்திற்கு பின்னர் மீனவர்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பது ஒன்றே மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி, கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதியும், இந்திரா காந்தியும் ஒப்புக்கொண்டு தான் இலங்கைக்கு தாரை வார்த்தனர். கருணாநிதியை சம்மதிக்க வைக்க இந்திராகாந்தி அவருக்கு பணம் கொடுத்திருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். இதற்காக கருணாநிதியோ அல்லது திமுகவோ தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியின் இந்த திடுக்கிடும் குற்றச்சாட்டுக்கு திமுக தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தில் இணைந்த இன்னொரு நாயகி

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல நாயகி ஒருவர் இணைந்துள்ளார்...

தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை. டெல்லி தமிழ் மாணவரின் தந்தை பேட்டி

டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்து கொண்டிருந்த மாணவர் முத்துகிருஷ்ணன் நேற்று தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் தமிழகத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் அதிர்வலையை எழுப்பியது. மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றிருப்பதாகவும், பிī

டெல்லி பல்கலையில் தமிழக மாணவர் தற்கொலை. அதிர்ச்சி தகவல்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அந்த பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த தமிழக மாணவர் ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'2.0 சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் '2.0'.

இரோம் ஷர்மிளாவை தோற்கடித்த முதல்வரை ராஜினாமா செய்ய உத்தரவிட்ட கவர்னர்

பிரபல சமூக சேவகியும், மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவருமான இரோம் ஷர்மிளாவை வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற வைத்து தோற்கடித்தவர் மணிப்பூர் முதல்வர் இபோபி சிங். இவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்மாநில கவர்னர் உத்தரவிட்டு&#