மீனவர் பலி விவகாரம். தமிழர்களை கேவலப்படுத்தும் சுவாமி

  • IndiaGlitz, [Tuesday,March 07 2017]

இன்று அதிகாலை தமிழக மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூடு காரணமாக பலியான சோகத்தில் மீனவர்களும் தமிழக மக்களும் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் இன்னொரு புறம் பாரதிய ஜனதா முத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

சுவாமி தனது சமூக வலைத்தளத்தில், 'தமிழ் பொறுக்கிகள் கட்டுமரங்களை வாடகைக்கு எடுத்து கொண்டு இலங்கை கடற்படையுடன் சண்டை போடுவதற்கு பதிலாக சாக்கடையில் ஒளிந்து கொண்டிருக்கின்றனர்' என்று பதிவு செய்துள்ளார்.

ஒட்டுமொத்த தமிழர்கள் கொதித்து எழுந்தால் இலங்கை கடற்படை என்ன, இலங்கையையே அழிக்கும் சக்தி உண்டு என்பதை சுப்பிரமணியன் சுவாமி புரிந்து கொள்ளும் நாள் வெகுதூரம் இல்லை என்று பலர் சமூக வலைத்தளத்தில் சுவாமியின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மீனவர் ஒருவரை இழந்து துக்கத்தில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு தேசிய தலைவர் ஆறுதல் கூறவில்லை என்றாலும் பரவாயில்லை, இதுபோன்று அவதூறு சொல்வது எந்த வகையில் நியாயம் என்பதுதான் நடுநிலையாளர்களின் கேள்வியாக உள்ளது.

More News

'மாநகரம்' படம் பார்க்கலாமா?

2015ல் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற ‘மாயா’ படத்தைத் தொடர்ந்து , ‘Potential Studios' நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘மாநகரம்’. ..

மீனவன் உயிரின் மதிப்பு ரூ.5 லட்சம் தானா? இன்னொரு உயிரிழப்புக்கு முன் நடவடிக்கை தேவை!

 இன்று அதிகாலை பிரிட்டோ என்ற மீனவர் இலங்கை கடற்படையினர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரூ.10 கோடி மோசடி செய்த பிரபல நகைச்சுவை நடிகர் கைது

ரூ.10 கோடி கொடுத்தால் ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

மீனவர் உயிர் என்ன கிள்ளுக்கீரையா? இனியும் வேடிக்கை பார்க்கலாமா மத்திய மாநில அரசுகள்?

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, மீனவர்களை தாக்கிக் காயப்படுத்துவதோடு அவர்களுடைய படகு மற்றும் வலைகளை சேதப்படுத்துவது,