ரஜினியை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்: சுப்பிரமணியம் சுவாமி

  • IndiaGlitz, [Thursday,July 06 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்ய அமெரிக்காவுக்கு சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் கேசினோ விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நாம் தமிழர் சீமான் கூறியபோது, 'நாங்கள் மக்களுக்காக போராடி வருகிறோம், ரஜினி அமெரிக்காவில் கேசினோ விளையாடி வருகிறார். அது முதலாளிகள் விளையாடும் விளையாட்டு, அதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை' என்று கூறினார்.

இந்த நிலையில் இதுகுறித்து பாஜக முத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ரஜினிகாந்த் தனது உடல்நிலை தேற அமெரிக்காவில் கேசினோ விளையாடுகிறார். அவருக்கு எங்கே இருந்து டாலர்கள் கிடைத்தது என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று சீமானும், சுப்பிரமணியன் சுவாமியும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமலுக்கு அடுத்த இடத்தில் விஜய்சேதுபதியை பார்க்கிறேன். மாதவன்

மாதவன், விஜய்சேதுபதி முதன்முதலாக இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென தியேட்டர் வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது...

அன்பானவர் அசராதவர் பிரமாதமானவர்: அஜித், விஜய், சூர்யா குறித்து காஜல்

அஜித், விஜய் என இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களில் ஒரே நேரத்தில் நாயகியாக நடித்து கொண்டிருக்கும் பெருமையை பெற்றவர் காஜல் அகர்வால். மேலும் கோலிவுட்டின் இன்னொரு முக்கிய நடிகரான சூர்யாவுடனும் நடித்தவர்...

முதலில் கோரிக்கை வைப்போம். பின்னர் பார்த்துக்கொள்ளலாம்: ரஜினி டுவீட்டுக்கு கமல் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கேளிக்கை வரியை ரத்து செய்து லட்சக்கணக்கான சினிமா தொழிலாளிகளை தமிழக அரசு காக்க வேண்டும் என்று தனது டுவிட்டரின் மூலம் கேட்டுக்கொண்டார்.

நிஜத்தில் 'ஹீரோ'வாக மாறிய 'தெறி' வில்லன்

தளபதி விஜய் நடித்த 'தெறி' உள்பட பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்தவர் தீனா

ரஜினியின் ட்வீட்டால் அடித்துக்கொள்ளும் விஜய்-அஜித் ரசிகர்கள்

தமிழ் திரையுலகினர் தற்போது சந்தித்து வரும் ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி பிரச்சனைக்கு அனைத்து திரையுலகினர்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.