பாடகி சுசித்ரா ரிலீஸ் செய்த புதிய வீடியோ

  • IndiaGlitz, [Saturday,July 01 2017]

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு அதில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி கோலிவுட் திரையுலகையே கதிகலங்க வைத்தது.
இந்த நிலையில் பாடகி சுசித்ரா தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த வீடியோ எந்த சினிமா பிரபலங்களின் அந்தரங்கம் அல்ல, அதற்கு பதிலாக காலத்தால் அழியாத பாடலான 'அன்புள்ள மான்விழியே' என்ற பாடலை சுசித்ரா தன்னுடைய குரலால் பாடிய வீடியோவைத்தான் இணைத்துள்ளார்.
கடந்த 1965ஆம் ஆண்டு வெளியான 'குழந்தையும் தெய்வமும்' என்ற படத்தில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையில் டி.எம்.செளந்திரராஜன், பி.சுசிலா பாடிய பாடலை சுசித்ராவின் இனிமையான குரலில் கேட்க விருப்பமா? இந்த https://www.youtube.com/watch?v=V2h3Gqu7AeE&feature=youtu.be லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்

More News

எந்த லெவலுக்குப் போவேன் என்று மிரட்டுகிறார்! பாலாஜியின் மனைவி புகார்

நகைச்சுவை நடிகர் பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த மே மாதம் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தன்னை ஜாதியின் பெயர் சொல்லி பாலாஜி திட்டியதாக அவரது மனைவி நித்யா புகார் அளித்திருந்தார்.

ஜிஎஸ்டி விவகாரத்தில் ரஜினியின் மெளனம் ஏன்? டி.ராஜேந்தர்

நாடு முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திரைத்துறை உள்பட பல்வேறு துறைகள் இந்த புதிய வரிவிதிப்பால் பாதிப்படையும் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசின் கேளிக்கை வரி ஜிஎஸ்டியில் அடங்குமா? தெளிவுபடுத்த விஷால் கோரிக்கை

இன்று முதல் நாடு முழுவதும் ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரிமுறை நடைமுறைக்கு வந்த போதிலும் திரைத்துறையை பொறுத்தவரை மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி என இரண்டு வரிகள் செலுத்த வேண்டிய நிலை உள்ளது...

சென்னையில் 'தல' தரிசனம். ரசிகர்கள் மகிழ்ச்சி

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வந்த 'விவேகம்' படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பிற்காக அஜித், விவேக் ஓபராய் உள்பட படக்குழுவினர் மீண்டும் கடந்த வாரம் செர்பியா சென்றதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

ஜிஎஸ்டி: மோடிக்கு எதிராக ரஜினியை திருப்ப எடப்பாடியின் வியூகமா?

பிரதமர் மோடியின் மத்திய அரசுக்கு எதிராக ரஜினி, விஜய் போன்றவர்களை திருப்ப, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆடும் சதுரங்க விளையாட்டு தான் ஜிஎஸ்டி என்று கிருஷ்ணவேணி பஞ்சாலை, பறந்து செல்ல வா போன்ற படங்களை இயக்கிய தனபால் பத்மநாபன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.