'சூர்யா 41' படத்தில் இணைந்த சுதா கொங்காராவின் இரண்டு மகள்கள்?

  • IndiaGlitz, [Friday,May 13 2022]

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. கன்னியாகுமரி அருகே முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் சுதா கொங்காராவின் இரண்டு மகள்கள் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘சூர்யா 41’ திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் என்ற பணியில் சுதா கொங்காரா பணியாற்றிய நிலையில் தற்போது அவர் ’சூரரைப்போற்று’ ஹிந்தி ரீமேக் படத்தின் பணியில் சுறுசுறுப்பாக இருப்பதால் அவருக்கு பதிலாக அவருடைய இரண்டு மகள்கள் ’சூர்யா 41’ படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிந்து வருவதாகவும் இருவருமே சுறுசுறுப்பாக படக்குழுவினர்கள் மத்தியில் வேலை வாங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சூர்யா இந்தப் படத்தில் மீனவர் கேரக்டரில் நடித்திருப்பது மட்டுமின்றி அந்த ஊரில் நடக்கும் அனைத்து அநியாயங்களை தட்டிக்கேட்கும் ஒரு நேர்மையான இளைஞராகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டி, ஒரு சுற்றுலா பயணிகளுக்கான கைடு கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் தயாராகி வரும் ‘சூர்யா 41’ திரைப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

ரிலீஸ் ஆனது 'டான்':  திரையரங்கில் ரசிகர்கள் முன் தோன்றிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் முதல்நாள் முதல் காட்சியை ஏராளமானோர் காத்திருந்து பார்த்து

'அஜித் 61' படத்தில் இணைந்ததை உறுதி செய்த பிரபல இயக்குனர்-நடிகர்!

அஜித் நடித்து வரும் 'அஜீத் 61' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. எச். வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில்

இணையத்தில் வைரலாகும் தீபிகா படுகோனேவின் வேற லெவல் யோகா புகைப்படங்கள்!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் வேற லெவல் யோகா புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவை தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

'விக்ரம்' படத்தில் சூர்யா நடித்திருப்பது உண்மையா?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

இருட்டு நெஞ்சுக்குள்ள நீரடிக்க: பட்டாம்பூச்சி படத்தின் பாடல் வரிகள்!

சுந்தர் சி நடிப்பில் பத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.