சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் மாஸ் நடிகர்? பிரபல நாவல் படமாகிறதா?


Send us your feedback to audioarticles@vaarta.com


இயக்குனர் சுதா கொங்கரா தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’பராசக்தி’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், அவரது அடுத்த படத்தில் ஒரு மாஸ் நடிகர் நடிக்க இருப்பதாகவும், பிரபல நாவலை படமாக்க சுதா கொங்கரா திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் ’பராசக்தி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சுதா கொங்கரா அடுத்ததாக சிம்பு நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படம் ’பராசக்தி’ படத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ’வேட்டை நாய்’ என்ற தலைப்பில் வெளியான நாவல் தான் திரைப்படமாக உருவாக இருக்கிறது என்றும், இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
சிம்பு ஏற்கனவே மூன்று படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கும் நிலையில், இந்த படம் எப்போது தொடங்கும், எப்போது அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் இல்லை. ஆனாலும், சிம்பு - சுதா கொங்கரா இணையும் படம் நிச்சயம் உருவாகும் என கோலிவுட் திரை உலகில் கூறப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments